பக்கம்:அறப்போர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறப்பது எப்படி ?


டியதை வேண்டியபடியே விளக்கும் ஆற்றல் மன்னர் பெருமானுக்கு உண்டு. இதையும் பரிசிலர் நன்முக உணர்வார்கள். அவர்களுக் குச் சொர்க்கபூமி என்றாலும் அதனிடத்தில் மதிப்பு இல்லை. வியாபாரியிடம் பணத்தைக் கொடுத்தால் பண்டம் கிடைக்கிற்து. ஒரு வீட்டை உடையவனிடம் குடிக்கூலி கொடுத்தால் அங்கக் கூலி உள்ளவரையில் அந்த வீட்டில் வாழலாம். தேவலோகம் என்பது குடிக்கூலி கொடுத்து வாழும் இடந்தானே? மிகவும் இனிய போகத்தை உடையது, பொன் மயமான கற்பகப் பூங்காவை உடையது என்று சொல்லும் அவ்வுலகத்தில் உள்ளவர்கள் தாம் செய்த கல்வினைக்கு ஈடாக அங்கே வாழ்கிறர்கள். நல்வினை தீர்ந்தால் சொர்க்க போகமும் போய்விடும். அது ஒரு பெருமையா? அங்கே எதையாவது யாருக்காவது கொடுத்து உவக்க முடியுமா? ஈவோரும் ஏற்போரும் இல்லாத நாடு அல்லவா? உடையவர் ஈந்து உவக்கும் இன்பமும், இல்லாதவர் நல்ல உபகாரிகளிடம் இரந்து பொருள் பெறும் இன்பமும் இல்லாத அந்த நாட்டில் பரிசிலர் போய் என்ன செய்ய முடியும்? அருமையான தமிழ்ப் பாட்டை அங்கே போய்ச் சொன்னல் யார் கேட்கப் போகிருரர்கள்? கேட்டாலும் பரிசில் தருவார்களா? ஒன்றும்

87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/105&oldid=1267474" இலிருந்து மீள்விக்கப்பட்டது