பக்கம்:அறப்போர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோட்டிடை வைத்த கவளம்


சிறிது நேரம் அதியமான் ஔவையாரைப் பார்த்துப் பேசினான். ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாட்கள் ஆயின. அதியமான் ஏதோ மிகமிக முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறான் என்பதை ஔவையார் உணர்ந்து கொண்டார். ஆதலின் அவனாக எப்போது விடை கொடுக்கிறானோ, அப்போது போகலாம் என்று நினைத்தார்.

பின்னும் சிலநாள் அங்கே தங்கியிருந்தார். ‘நமக்குப் பரிசில் தருவதைப் பற்றி ஏதேனும் யோசித்து இப்படி நாட்களை நீட்டிக்கிறானோ?’ என்ற எண்ணம் ஒரு கணம் ஔவையாருக்குத் தோன்றியது. மறுகணமே அவ்வாறு எண்ணியதற்கு வருந்தினார். என்ன பைத்தியக்கார எண்ணம்! ஏ நெஞ்சமே! நீயா இப்படி நினைத்தாய்? இதைக் காட்டிலும் தாழ்ந்த எண்ணம் வேறு இல்லை. அதியமானுடைய இயல்பை அறிந்தும் இப்படி நினைக்கலாமா? அட பேதை நெஞ்சே! நமக்குக் கிடைக்கும் பரிசில் எங்கே போகப் போகிறது? அவன் தரும் பரிசிலைப் பெற்றுப் பயன் அடைய வேண்டும் என்ற ஆவல் உனக்கு அதிகமாக இருக்கிறது. அதனால்தான் அவன் தருவானோ மாட்டானோ என்று ஏங்குகிறாய். அவன் தருவதை நுகர, அருந்த, ஏமாந்த நெஞ்சமே! நீ வருந்த வேண்டாம்.'

101

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/119&oldid=1267491" இலிருந்து மீள்விக்கப்பட்டது