பக்கம்:அறப்போர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


கிடைக்குமோ; கிடைக்காதோ என்று நீ வருந்த வேண்டியதில்லை. அவன் ஏதோ முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான். அதில் வெற்றி பெறுவானாக என்று நாம் வாழ்த்த வேண்டும். அவன் முயற்சி வாழட்டும் என்று வாழ்த்துவோம்.’

இப்படியெல்லாம் நெஞ்சோடு பேசிய பேச்சைப் பிறகு ஔவையார் ஒரு பாட்டாக உருவாக்கினார்.

ஒருநாள் செல்லலம் ; இரு நாள் செல்லலம் ;
பல நாள் பயின்று பலரொடு செல்லினும்
தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ!
அணியூன் அணிந்த யானை, இயல்தேர்
அதியமான் பரிசில் பெறூஉம் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும், யானை தன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுவே ; பொய் ஆ காதே;
அருந்தே மாந்த நெஞ்சம்,
வருந்த வேண்டா; வாழ்கவன் தானே!

ஒரு நாள் செல்வோம் இல்லை ; இரண்டு நாட்கள் செல்வோம் இல்லை ; பல நாட்கள் அடுத்தடுத்துப் பல மக்களோடு சென்றாலும் முதல் நாள் நம்மிடம் காட்டிய விருப்பத்தோடே இருப்பான் ; அணிதற்குரிய 'நெற்றிப் பட்டம் கிம்புரி முதலிய பூண்களை அணிந்த யானையையும், ஓடும் தேரையும் உடைய அதியமான் தரும் பரிசிலானது, அதனைப் பெறுவதற்கு அமையும் காலம் நீண்டாலும், நீளாவிட்டாலும், யானை உண்ணும் பொருட்டுத் தன் கொம்பினிடையே வைத்த கவளத்தைப்போல, நம் கையிலே

104

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/122&oldid=1267496" இலிருந்து மீள்விக்கப்பட்டது