பக்கம்:அறப்போர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புலவரின் வள்ளன்மை

முன் காலத்தில் வாழ்ந்திருந்த வள்ளல்களில் மிகச் சிறப்புப் பெற்றவர்கள் ஏழுபேர். புலவர்கள் அந்த எழுவரையும் தனியாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கு முன் புராண காலத்தில் இருந்தவர்களான பதினான்கு பேர்களைத் தனித் தனி ஏழு ஏழு பேர்களாகக் கூட்டித் தலை எழு வள்ளல்கள் என்றும், இடை எழு வள்ளல்கள் என்றும் சொல்லும் வழக்கம் பிற்காலத்தில் உண்டாயிற்று. அதனால் முன் சொன்ன ஏழு வள்ளல்களைக் கடை எழு வள்ளல்கள் என்றும் சொல்வதுண்டு. அந்த ஏழு வள்ளல்களாவார்: பாரி, வல்வில் ஓரி, மலையமான் திருமுடிக்காரி, அதியமான் நெடுமான் அஞ்சி, பேகன், ஆய், நள்ளி என்போர். இவர்களை ஒன்றாகச் சேர்த்துச் சிறுபாணாற்றுப் படை என்ற நூலும், புறநானூற்றில் உள்ள 158-ஆம் பாட்டும் சொல்கின்றன.

இந்த ஏழு வள்ளல்களின் காலத்துக்குப் பிறகும் பல மன்னர்களும் சிற்றரசர்களும் பிறரும் கொடையிலே சிறந்தவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குள்ளே தலைமை பெற்றவனென்று புலவர்கள் பாடும் புகழைப் பெற்-

106

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/124&oldid=1267498" இலிருந்து மீள்விக்கப்பட்டது