பக்கம்:அறப்போர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவரின் வள்ளன்மை


மனத்துக்கு இனிய வகையில் புலவருடைய புலமைத் திறத்தை உணர்ந்து பாராட்டினான்.

பலகாலமாக யாரிடமும் செல்லாமல் ஒதுங்கி ஒதுங்கி வாழ்ந்த புலவருக்கு இப்படி ஒரு வள்ளல் கிடைக்கவே, அவர் சொர்க்க பூமிக்கே வந்துவிட்டவரைப் போல ஆனார். அவருடைய பாடல்களைக் கேட்டுக் கேட்டு மகிழ்ந்தான் குமணன்.

“இவ்வளவு காலமாக உங்களை உணராமல் இருந்தது பெரிய பிழை” என்றான் அரசன்.

“இத்தனை காலம் இவ்விடத்தை அணுகாதிருந்ததற்கு என் பண்டைத் தீவினையே காரணம்” என்றார் புலவர்.

“இப்பொழுதேனும் தங்களைக் கண்டு பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்” என்றான் அரசன்.

“என் வாழ்நாள் முழுவதுமே நல்ல வள்ளலைக் காணாமல் கழியுமோ என்று அஞ்சியிருந்த எனக்கு இந்த இடத்தை மிதித்தவுடன் இவ்வளவு காலமும் வாழ்ந்திருந்ததற்குப் பயன் கிடைத்து விட்டதென்ற ஆறுதல் உண்டாயிற்று” என்றார் பெருஞ்சித்திரனார்.

“இறைவன் திருவருள் எப்பொழுது கூட்டி வைக்கிறதோ, அப்பொழுது தானே எதுவும் நிறைவேறும்? தங்களுடைய பழக்கத்-

113

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/131&oldid=1267505" இலிருந்து மீள்விக்கப்பட்டது