பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 11


செய்யுள். வாடையை விளித்துக் கூறுவது போலத் தோழி தலைவியிடம் கூறியதாகவேனும், அன்றித் தலைவி தோழியிடம் கூறியதாகவேனும் கொள்ளலாம்.)

        அரம்போழ் அவ்வளை தோள்நிலை நெகிழ,
        நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி-
        ஈர்ங்காழ் அன்ன அரும்புமுதிர் ஈங்கை
        ஆலி யன்ன வால்வி தாஅய்
        வைவால் ஓதி மையணல் ஏய்ப்பத் 5

        தாதுஉறு குவளைப் போதுபணி அவிழப்,
        படாஅப பைங்கண பாவடிக கயவாயக
        கடாஅம் மாறிய யானை போலப்,
        பெய்துவறிது ஆகிய பொங்குசெலற் கொண்மூ
        மைதோய் விசும்பின் மாதிரத்து உழிதரப், 10

        பனிஅடுஉ நின்ற பானாட் கங்குல்
        தனியோர் மதுகை தூக்காய், தண்ணென,
        முனிய அலைத்தி, முரண்இல் காலை;
        கைதொழு மரபின் கடவுள் சான்ற
        செய்வினை மருங்கிற் சென்றோர் வல்வரின் 15

        விரியுளைப் பொலிந்த பளியுடை நன்மான்
        வெருவரு தானையொடு வேண்டுபுலத்து இறுத்த
        பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,
        சூடா வாகைப் பறந்தலை, ஆடுபெற
        ஒன்பது குடையும்.நன்பகல் ஒழித்த 20
        
        பீடில் மன்னர் போல,
        ஓடுவை மன்னால்-வாடை! நீ எமக்கே.

முடிவு போகாத இல்வாழ்க்கையை முற்றுவிக்க வேண்டி: அரத்தாற் போழப்பட்ட அழகிய வளைகள் எம் தோள் நிலையினின்றும் நழுவும்படி,

ஈரிய கொட்டை போலும் அரும்புகள் முதிர்ந்த ஈங்கையின் ஆலங்கட்டிபோலும் வெளிய பூக்கள் உதிர்கையினாலே,

கூரிய வாலையுடைய் ஓந்தியின் இருண்டதாடியைப்போலத் தாது நிரம்பிய குவளைமொட்டுக் கட்டவிழவும்;

உறங்காத பசிய கண்ணையும், பரந்த அடியையும், பெரிய வாயையும், வற்றிய மதநீரையுமுடைய யானைபோலப் பெய்துவற்றிய பொங்கிய செலவினையுடைய மேகமானது, நீலநிறந்தோய்ந்த வானிடத்துப் பல திசைகளினும் திரிந்து கொண்டிருக்கவும்;