பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 13


உரித்தென மொழிப’ என்னும் அகத்திணையியற் சூத்திரவுரையிலும்;

‘இப்பாட்டினைக் காட்டி, இதனுள் பலரும் கைதொழும் மரபினையுடைய கடவுட்டன்மை யமைந்த செய்வினையெனவே ஓதற் பிரிதலென்பது பெற்றாம் என, ‘ஓதலுந் தூதும் உயர்ந்தோர் மேன’ என்னும் சூத்திரவுரையிலும்;

“சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே' என்பதனால், கிழவனும் கிழத்தியும் இல்லறத்திற் சிறந்தது பயிற்றாக்கால் இறந்ததனாற் பயனின்றாதலின், இல்லறம் நிரம்பாதென்றற்கு ‘நிரம்பா வாழ்க்கை’ என்றார்; இல்லறம் நிகழ்த்துகின்ற காலத்தே, மேல்வரும் துறவறம் நிகழ்த்துதற்காக அவற்றைக் கூறும் நூல்களைக் கற்று, அவற்றின் பின்னர்த் தத்துவங்களை உணர்ந்து, மெய்யுணர்தல் அந்தணர் முதலிய மூவர்க்கும் வேண்டுதலின், ஒதற்பிரிவு அந்தணர் முதலியோர்க்கே சிறந்த தென்றார்” என்றும்;

‘வேண்டிய கல்வியாண்டுமூன்றிறவாது என்னுங் கற்பியற் சூத்திரத்து, ‘அரம்போழ் அவ்வளை’ என்னும் பாட்டினுள், ‘பானாட் கங்குலில்.முனிய அலைத்தி. கடவுட்சான்ற செய்வினை மருங்கிற் சென்றோர் வல்வரின் ஒடுவை என்றது இராப்பொழுது அகலாது நீட்டித்ததற்கு ஆற்றாளாய்க் கூறினாளென்று உணர்க என்றும், நச்சினார்க்கினியர் கூறுவர்.

‘தேவர் காரணமாகப் பிரியும் பிரிவிற்கு, இப்பாட்டை ‘மேவிய சிறப்பின் என்னும் சூத்திரவுரையில் இளம்பூரணனார் காட்டுவர்.

பாடபேதங்கள்: 5. வைவரலோதி. 6. க்கேழுறு; க்கோஸ்ரீ. 9. வோங்குசெலற் 10. திழிதர.11. பனிபட நின்ற.

126. மடமை கெழுமிய நெஞ்சமே!

பாடியவர்: நக்கீரர். திணை: மருதம். துறை: 1. உணர்ப்பு வயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 2அல்ல.குறிப்பட்டு அழிந்தது உம் ஆம். 3. தோழியைப் பின்னின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது உமாம். சிறப்பு: பல்வெல் எவ்வி; திதியனோடு பொருத அன்னி பற்றிய செய்திகள்.

(தலைவி தலைவனோடு ஊடினாள்; அல்லது அல்ல குறிப்பட்டு அவன் கலங்கினான்; அல்லது தோழியிடம் தன் தலைவியைக் கூட்டுவிக்க வேண்டி நிற்கின்றான். இந்நிலையிலே,