பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அகநானூறு - மணிமிடை பவளம்


        வேங்கை விரியினர் ஊதிக், காந்தள்
        தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை
        இருங்கவுட் கடாஅம் கனவும்,
        பெருங்கல் வேலி, நும் உறைவின் ஊர்க்கே

தூங்கித் தாழ்ந்த கதிரினையுடைய தினையும் அறுக்கப்பட்டன; இவளுடைய நெற்றியும் நோய்மிக்கதனால் ஆயத்தாரால் ஆராயப்பட்டதன் அழகுகெட்டது; இவ்வூரவரும் இதனை நோக்கிப் புறமான பழிச்சொற்களைச் சொல்லுகின்றனர்;

ஆதலினாலே,

களிற்றின் முகத்தைப் பிளந்த அம்பினையும், கன்னத்து அடக்கிய வெள்ளிய நிணமாகிய உணர்வினையுமுடைய, குறிஞ்சிநில மாக்களின் தங்கையாகிய, அழகிய மூங்கில் போன்ற மெத்தென்ற தோளினையும், ஆராய்ந்தெடுத்த இதழ் போன்ற குளிர்ந்த கண்ணினையும், துவளும் இயல்பினையுமுடைய குறிஞ்சிநிலத் தலைவியை அருளுவையாயின்;

மழைத்துளியை முதற்பெயலாகப் பெய்துவிட்ட மலைச் சாரலிலே, பலவாகச் செறிந்த சுனையிடத்துக் கூம்பிய மொட்டை விரித்த, குறுமையான சிறகையுடைய பறவையாகிய வண்டுகள், வேங்கையின் விரிந்த பூங்கொத்தினை நுகர்ந்து, தேனையுடைய காந்தளின் குவிந்த குலையிலே உறங்கி, யானையினது பெரிய கவுளிடத்து ஒழுகும் மதநீரை உண்பதாகக் கனாக்காணும், பெரிய மலையைச் சூழக்கொண்ட உறைதற்கு இனிய நுமது ஊர்க்கு;

வரைந்து கொண்டு செல்வாயாக

என்று, தோழி தலைமகளை இடத்துய்த்து வந்து தலைமகனை எதிர்ப்பட்டு நின்று வரைவு கடாயினாள் என்க.

சொற்பொருள்: 1. இறங்கு குரல் - தூங்கித் தாழ்ந்தகதிர். இறுத்தன - அறுக்கப்பட்டன. நோய் மலிந்து - நோய் மிகுந்து. 4. ‘கவுளுடை வால்நிணப் புகவின் கானவர் எனக்கூட்டுக. புகவுஉணவு. 7. ஒல்கியல் துவளும் இயல்பு கொடிச்சி - குறிஞ்சி நிலத் தலைவி. 9. தலைஇய முதற் பெயலாகப் பெய்து விட்ட 12. குவிகுலை - குவிந்தகுலை.

உள்ளுறை: கூம்பு முறை அவிழ்த்த பறவை, வேங்கையின் இணர் ஊதிக் காந்தட் குலையில் துஞ்சி, யானைக் கடாம் கனவும் என்றதன் கருத்து, தலைமகளின் நாண் முதலிய தளைகளை