பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



26]

களிற்றியானை நிரை

௬௩


1கூன்முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற
மீன்முள் ளன்ன வெண்கால் மாமலர்
பொய்தல் மகளிர் விழவணிக் கூட்டும்
அவ்வயின் நண்ணிய வளங்கே ழூரனைப்
 
ரு) புலத்தல் கூடுமோ தோழி அல்கல்
பெருங்கதவு பொருத யானை மருப்பின்
இரும்புசெய் தொடியி னேர வாகி
மாக்கண் அடைய மார்பகம் பொருந்தி
முயங்கல் விடாஅல் இவையென மயங்கி

க0) யானோம் என்னவும் ஒல்லார் தாமற்
றிவைபா ராட்டிய பருவமு முளவே, இனியே,
புதல்வற் றடுத்த பாலொடு தடைஇத் -
திதலை அணிந்த தேங்கொள் மென்முலை
2நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் அகலம்

கரு) வீங்க முயங்கல் யாம்வேண் டினமே
தீம்பால் படுதல் தாமஞ் சினரே, ஆயிடைக்
கவவுக்கை நெகிழ்ந்தமை போற்றி மதவுநடைச்
செவிலி கையென் புதல்வனை நோக்கி
நல்லோர்க் கொத்தனிர் நீயிர் இஃதோ

உ௦) செல்வற் கொத்தனம் யாமென மெல்லவென்
மகன்வயிற் பெயர்தந் தேனே அதுகண்
டியாமுங் காதலம் அவற்கெனச் சாஅய்ச்
சிறுபுறங் கவையின னாக 3உறுபெயல்
தண் துளிக் கேற்ற பலவுழு செஞ்செய்

உரு) மண்போல் நெகிழ்ந்தவற் கலுழ்ந்தே
நெஞ்சறை போகிய அறிவி னேற்கே.

- பாண்டியன் கானப் பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி.

(சொ - ள்.) சு-கக. தாம் - நம் தலைவர் தாம், பெருங் கதவு பொருத யானை மருப்பின் இரும்பு செய்தொடியின் ஏர ஆகி - பெரிய மதிற் கதவினைப் பாய்ந்து பிளந்த யானையின் கோடுகளிற் பொருந்திய இரும்பினாற் செய்யப்பெற்ற பூணின் அழகினையுடைய வாகி, மா கண் இவை - கரிய கண்களையுடைய இவை, மார்பு அகம் அடைய பொருந்தி முயங்கல் விடாஅல் என - தம் மார்பகம் அழுந்தப் பொருந்தி முயங்குதலை விலக்கற்க என்று கூறி, யான் மயங்கி ஓம் என்னவும் ஒல்லார் மற்று இவை பாராட்டிய பருவமும் உள - யான் வருந்தி ஒழிவீராக எனவும் தாம் அதற்குப் பொருந்தாராகிப் பின்னும் இவைகளைப் பாராட்டிய காலங்களும் உள்ளன;

கக-சு. இனி - இப்பொழுதோ, புதல்வன் தடுத்த பாலொடு தடைஇ - புதல்வன் உள்ளத்தைப் பிறிதிற் செல்லாது தடுத்துக் கொண்ட பாலாற் சரிந்து, திதலை அணிந்த தேம்கொள் மென் முலை -


(பாடம்) 1. கூர்முள், 2. நறுஞ்சாந்து புலர்ந்த. 3. இகு பெயல்.