பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

எஸ். எம். கமால்

பகுதிகளில் நெசவு செய்யப்பட்ட சாதாரண வெள்ளைத் துணிகளும் ஏராளமாக கொள்முதல் செய்து அனுப்பப்பட்டு வந்தன. ஆண்டுதோறும், ஒன்றரை மில்லியன் துணி சிப்பங்கள் மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதில் மஸ்லின் காலிகோ, டோரியாஸ், கைக்குட்டைகள், லாங்கிளாத், பெட்டு லாஸ் என்ற வகைகளும் அடங்கும். அவைகளின் மதிப்பு 2, 9 மில்லியன் பவுன்கள் என்று கணக்கிடப்பட்டது. இதில் மூன்றில் ஒரு பங்கு பெறுமான சரக்குகள் சோழமண்டலக்கரையான தமிழ் நாட்டைச் சேர்ந்தது என்பதை அன்றைய வாணிபப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.[1] இன்னொரு ஆய்வின்படி ஒரு சிப்பத்தில் 1000 கஜம் துணி கொண்டதாக உள்ள சிப்பங்கள் ஒரு டன் சரக்காகக் கருதப்பட்டது. சுமார் 500 டன் நிறையுள்ள கப்பலில் 34 மில்லியன் கஜத்துணி சிப்பங்களை நிரப்பி எடுத்துச் செல்ல முடியும். ஆண்டுதோறும் இங்கிருந்து இவ்விதமான துணிப் பொதிகளைச் சுமந்தவாறு பதினொன்று அல்லது பன்னிரண்டு கப்பல்கள் இங்கிலாந்திற்கு புறப்பட்டுச் சென்றன. மொத்தத்தில் 30 மில்லியன் கஜத்திற்கும் மிகுதியான துணி ஆண்டுதோறும் இங்கிருந்து கும்பெனியாரால் ஏற்றுமதி செய்யப்பட்டது.[2]

இத்தகைய சிறப்பான வாணிப சூழ்நிலை காரணமாக தமிழகப் பெண்களும், குழந்தைகளும்கூட நெசவுத் தொழிலில் ஈடுபடாத கிராமம் எதனையும் சோழ மண்டலக் கரையில் காண முடியவில்லை, என வரலாற்று ஆசிரியர் இராபர்ட் ஊர்ம் வரைந்து வைத்துள்ளார்.[3] இதன் காரணமாக 40,000 தறிகளுக்கு வேலை இருந்தன. இவைகளில் 50,000 நெசவாளிகள் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் பெரும்பகுதி, சென்னையிலும், கடலூர், உடையார்பாளையம், சின்னமன்னாடிபாளையம்,

சிர்காழி மற்றும் இராமனாதபுரம் திருநெல்வேலிச் சீமையைச்


  1. Venkataraman, K. S. Handloom Industry in South India (1940)
  2. Dodwell, H., Madras Weavers under the company (1910), p. 41
  3. Robert Oorme, Historical Fragments of Mogul Empire, p. 413