பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I of

விளக்கனேந்தல், குணங்குடி, குணபதிமங்கலம் ஆகிய ஊர்களும் சமணர்களது குடியேற்றங்கள் என்பதில் ■ == - Ο இராமலிங்க விலாசம் சேது வேந்தர்களில் மிகவும் சிறப்புற்று விளங்கிய கிழவன் சேதுபதி (1675-1710) யின் ஆட்சியில் இராமநாதபுரம் கோட்டை சேது நாட்டின் தலைநகராக மாற்றம் பெற்றது. இதன் பின்னர் இக்கோட்டையின் உட்புறத்தில் அரசரது இருக்கைக்கு ஏற்ற மாளிகைகள் நிர்மாணிக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் இராம லிங்க விலாசம் அரண்மனை. - தண்டமிழ்க் காவலர்களாக விளங்கிய சேதுபதிகளது அவைக்களமாகவும், ஆடம்பர இல்லமாகவும் பயன் படுத்தப்பட்ட் காரணத்தினால், இந்த மாளிகையின் உட்புறம், வண்ண ஒவியங்களால் அழகு படுத்தப் பட்டன. ஒவியக் கலைக்கும் வரலாற்றியலுக்கும் பெருமை தரும் ஒவியங்கள் அங்கு காணப் படுகின்றன. தஞ்சை மன்னருக்கும், சேதுபதிக்கும் நடந்த போரைச் சித்தரிக்கும் ஒவியம், ஆடற்கலையை மன்னர் பல்வேறு உடையணிந்த நிலையில் கண்டு மகிழும் ஒவியங்கள், சேதுபதி மூன்று ஆங்கிலேயர்களை வரவேற்கும் ஒவியம் மற்றும் இராமாயணம், பகவத்கீதை இவற்றை விளக்கும் காட்சிகளும், சைவ வைணவ இலக்கியங் களைச் சித்தரிக்கும் ஓவியக் காட்சிகளும் இராமலிங்க விலாசத்தில் இடம் பெற்றுள்ளன.