பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:பராசிரியர். டாக்டர் ந. சஞ்சீவி, த2ல்வர், தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக் கழகம், இதன் ஆன-600 004. அணிந்துரை 'தரித்திரம் போகுது, செல்வம் வருகுது படிப்பு வளருது, பாவம் தொலையுது” என்று புதிய கோணங்கியில் பாடினர் பாரதி, அவர். கனவை நனவாக்குவனவாக படிப்பு வளர்ச்சியுற்ற நிலையில் புதுப் புதுக் கோணங்களில் நூல்கள் எழுந்த வண்ணமாக உள்ளன. இத்தகு நூல்களுள் ஒன்ருக, 'இராமநாதபுரம் மாவட்டம்-வரலாற்றுக் குறிப்பு கள்' என்ற நூலும் புத்தம் புது முயற்சியின் பயனுக புதிய செய்திகளுடன் உருப்பெற்றிருக்கிறது. இது ஒரு வரலாற்றுப் பெட்டகமாகவும், ஆய்வுக் கருவூல் மாகவும் அமைந்து எழில் குலுங்கும் நடையுடன்

  • _

மிளர்கின்றது. நாடு விடுதலையடைந்து முப்பத்தைந்து ஆண்டுகளா கியும் இராமநாதபுர மாவட்ட மக்களின் அவலநிலை மாற்றப்படவில்லை என்ற உண்மையைச் சுட்டிச் செல்லும் ஆசிரியர், அம்மாவட்டம் உருப்பெற்ற 曙 வரலாற்றையும் விவரமாகத் தருவது சிறப்புக்குரிய தாக அமைகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் 'சோழர்கள்' ‘சமணர்க்ள்’’ என்ற தலைப்புகளில் வரலாற்றுச் செய்திகளை கல்வெட்டுகள், காசுகள், ஊர்ப்பெயர்கள் போன்ற ஆதாரங்களைக் கொண்டு விளங்கியுள்ள பாங்கு ஆசிரியரின் ஆராய்ச்சி அறிவை தெற்றெனப் புலப்படுத்துகிறது. - - " - 'இராமலிங்க விலாசம், இராமேஸ்வரம் தீவு’ என்ற் சிடுதலைப்புகளில் கட்டிடக் கலையையும், ஒவியம் சிற்பம் இலக்கியம் ஆகிய கல்ைகளையும் விளங்குவன வாக அமைந்துள்ளன. கலையழகோடு வரலாற்று மூலங்களையும் மக்கள் வாழ் நிலையையும் மண்ணின் வாசனையையும் விளக்குகிருர்,