பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமநாதபுரம் மாவட்டத்தில் சோழர்கள். இராமநாதபுரம் மாவட்டம் முழுமையும் பாண்டிய நாட்டின் பகுதியாக விளங்கிய பொழுதிலும் சுமார் முன்னுாறு ஆண்டுகள் சோழப் பேரரசின் ஆட்சிக்கு அடங்கிய நாடாக கி. பி. 919 முதல் இருந்து வந்ததை வரலாறு வர்ணித்துள்ளது. அப்பொழுது இந்த மாவட்டத்தின் வடபகுதி ராஜராஜப் பாண்டிய நாடு ராஜேந்திர சோழவளநாடு எனவும், தென்பகுதி செம்பி நாடு எனவும் வழங்கப்பட்டது. இதன் நிர் வர்கத்தை சோழ இளவல்கள் சோழ பாண்டியர்' Στξέή பட்டத்ை த சுமந்து இயக்கி வந்தனர். இவர் களில் சிறப்புற்ற சோழகங்கதேவன்.சோழகங்கன் ஆகி. யோர்கள் பற்றிய செய்திகள்ை அருப்புக்கோட்டை கல் வ்ெட்டிலும், பள்ளிமடம் கல்வெட்டிலும் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும் ராஜாஜ சோழனது கல்வெட்டுக்கள் எதிர் கோட்டையிலும் (கி. பி. 1007) திருச்சுழியிலும் (கி.பி. 997) திருப்புத்துாரிலும் (கி.பி. 1013) உள்ளன. .ே சா ழ ப் பேரரசின் பெருமைக்குரிய இன்னொரு பேரரசனான மூன்ரும் குலோத்துங்க சோழ தேவன்து 35-வது ஆட்சி ஆண்டு கல்வெட்டு பிரான்மலையிலும், 22, 40, 48, 49-வது ஆட்சியாண்டு கல்வெட்டுக்கள். குன்றக்குடியிலும், 44-வது ஆட்சியாண்டு கல்வெட்டு பெருங்கருணையிலும், 48-வதுஆட்சியாண்டு கல்வெட்டு கோவிலாங்குளத்திலும் கிடைத்துள்ளன. இராமநாத, புரம் வட்டம் பெரியபட்டினம் கிராமத்தில் நிகழ்த்திய அகழ்வுகளில் ராஜராஜ சோழன்' சுங் கம் தவிர்த்த சோழன்' ஆகியவர்களது செப்புக்காசுகள்' கிடைத்துள்ளன. இவை இந் த மாவட்டத்தில்