பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 5 பகுதியில் கும்பெனியாருக்கு பணிந்து வாழவிரும்பாத தென்பாண்டி நா ட் டு பாளையக்காரர்கள் ஆதிக்க , ாைர்வைக்களைந்து அந்நியரை எதிர்த்துப் போராடும் நிலைக்கு வந்தனர். அவர்களை ஒரணிையில் திரட்டிவந்த பாஞ்சாலங்குறிச்சி பாளைக்காரர் கட்டப் பொம்மு நாயக்கர், கலெக்டர் ஜாக்ஸனின் கட்டளைக்கிணங்க 1798-இல் இந்த மாளிகையில்தான் அவரைச் சந்தித் தார். கட்டபொம்முவின் இறுதி வாழ்க்கையான இரண்டாண்டு போராட்டமே இங்கிருந்து த ா ன் துவங்கியது எனக்கொள்வதுதான் மிகப்பொருத்த மானதாகும். பலவகையிலும் சிறப்புற்று விளங்கும் இந்த அரண்மனை காலமெல்லாம் தமிழுணர்வையும், வீரவரலாற்றையும் இளஞ்சந்ததியினருக்கு வாரிவழங்கும் நினைவு மைய மாக விளங்க வேண்டுமென்பதற்காக இந்த அரண் மனையை தமிழக அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை யினர் 1978 முதல் தங்கள் பொறுப்பில் ஏற்று பராமரித்து வருகின்றனர். 1. " இராமேஸ்வரம் தீவு - .. இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களது சிறப்பான திருப்பணிகள் காரணமாக கட்ந்த ஆறு நூற்ருண்டு களுக்கு மேலாக இந்திய நாட்டின் திருத்தலங்களில் முதன்மை பெற்று விளங்குவது இராமேஸ்வரம் திருக் கோயிலாகும். இந்த ஆலயத்தைப் பலவகையிலும் விரிவுபடுத்தி அமைத்தவர்களும் அந்த மன்னர்களே.