பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 விஜய நகரப் பேரரசில் மிகுந்த அரசியல் செல் வாக்குப் பெற்றிருந்த தும்பிச்சிகள்' கீழக்கரை மாரியூர், காரையூர் கோயில் திருப்பணிகளைத் தொடர்ந்ததற்கான கல்வெட்டு க்கள் உள்ளன. ஆனல் கTளடைவில் நாயக்க அரசியலில் எழுந்த வெறுப்புக் காரணமாக பரமக்குடி தும்பிச்சி நாயக்கர் மதுரைப் பிரதிநிதியுடன் Լ1GՃ) E GԾ) ԼԸ) கொண்டார். சிறந்த போர் வீரரும் அரசியல் அறிஞருமான தும்பிச்சியை ஒழிப்பதற்காக 1564இல் மதுரைப் படையொன்று பரமக்குடியை நோக்கிப் புறப்பட்டது. அப்படை, பரமக்குடி கோட்டையை அடைவதற்கு முன்ன. தாகவே, அதனை வழிமறித்து போரிட்டு அழித்தார் தும்பிச்சி நாயக்கர். மதுரைத்தளபதி பெத்தகேசவப்பா ; போரில் கொல்லப்பட்டார். மதுரை அரசுக்கு; ஏற்பட்ட இந்தக் களங்கத்தைத் துடைப்பதற்கு! மற்றுமொரு பெரும்படை பரமக்குடிக்கு அனுப்பப் பட்டது. பரமக்குடிக்குத் தெற்கே நடைபெற்ற போரில் தும்பிச்சி நாயக்கர் தோல்வியுற்ருர். பின்னர் சிரச்சேதம் செய்யப் பட்டார். பரமக்குடி பாளையத் தின் தனித்தன்மையும் கலைந்தது. ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டு காலம், தன்னரசு போலத் திகழ்ந்த தும்பிச்சி நாயக்கர்களது சிறப்பான ஆட்சியின்பொழுது மதுரையில் குடியேறிய பட்டுநூல் காரர்களின் சில குடும்பத்தினர் பரமக்குடியிலும் குடி யேறினர். சேதுநாட்டின் ஒரு பகுதியான பரமக்குடி' யிலும் பிறகு இராம்நாதபுரத்திலும் இந்த மக்கள் நிலை கொண்டதால் அவர்கள் தங்களது பெயர்களுடன் கொடுவா, சேனதி, கும்பா, கஸ்தூரி, கெட்டல்,' தொகுலுவா, கிதுவா, ஏழை, ஜவுளி, துடுகுச்சி.