பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*1ங்" 2 I _ எழுந்தவைதாம் அக்காள்மடம் தங்கச்சிமடம் என வழங்கும் பாம்பனுக்கு அருகிலுள்ள சிற்றுரர்களாகும். பதினேழாம் நூற்ருண்டின் துவக்கத்தில் பாம்பனுக்கு வருகைதந்த இராமநாதபுரம் .ே ச து ப தி மன்னர் சடைக்கத்தேவரது பொன்னும் மணியும் நிறைந்த அங்கியொன்று அங்குள்ள வீரபத்திர சுவாமி கோயில் கிணற்றுக்குள் விழுந்து விட்டது. அந்தக் கிணற்றுக் குள் குதித்துத்தேடி எடுத்துத்தந்த ஒருவருக்கு இந்தப் பாறை நிறைந்த பகுதியில் படகுகளைப் பத்திரமாக செலுத்தி வந்து கரை சேர்க்கும் உரிமையை வழங்கிய தாகத் தெரிகிறது. இத்தகைய பணிமூலம் கிடைத்து வந்த ஊதியத்தை அனுபவித்து வந்த அந்த வழியின் 'ர'ான மொல்விமுகம்மது என்பவரது உ ரி ைே ம வெள்ளேயர் ஆட்சியின்போது பறிக்கப்பட்டது. இந்த் வருவாயை ஆங்கிலேயரே பெற்றுவந்தனர். இந்தப்பகுதியில் முத்துக்குளிக்கும் உரிமையை சேதுபதி மன்னர்களிடமிருந்து பெறுவதற்கு போர்ச்சுக்கேசி யரும், டச்சுக்காரரும் மேற்கொண்ட முயற்சிகள் வரலாற்றில் காணப்படுகின்றன. பதினெட்டாம் நூற்ருண்டின் இறுதியில் மறவர் சீமை யில் ஏற்பட்ட புரட்சிகளுக்கு பிரெஞ்சுக்காரர் போன்ற அன்னியரது ஆயுதஉதவி கிடைப்பதைத் தடைசெய்ய, இந்தப் பகுதியை ஆங்கிலேயர் மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வந்த செய்தியும் தெரியவருகிறது. பாம்பனில் வெளிநாட்டுக் கப்பல்கள் கடந்து செல்

வதைக் கண்காணிக்க படையணி ஒன்றை நிறுவுவதற்கு o :டச்சு அரசின் தூதுக்குழு 1706 இல் கிழவன் சேதுபதி
பின் அனுமதியைப் பெற்றது.