பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 'நாங்கள் நெய்து கொண்டிருக்கிருேம் நாங்கள் நெய்து கொண்டிருக்கிருேம் ஜெர் மனியே! உன் சவத்துணியை நாங்கள் நெய்து கொண்டிருக்கிருேம்' என் LITT ர் ஒர் ஜெர்மானியப் புரட்சி கவிஞர் 鷺*屬處劉 என்ற S! ளர்களின் வாழ்க்கையைச் சித்தரித்துள்ளார். ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு அன்றே சவ்த்துணியை நெய்து விட்டிருந்தார்கள் என்பது இப்பகுதி மூலம் அறியக் கிடக்கின்றது. - மேலும், இலங்கை இந்தியர் உறவுநிலை, வரலாற்றுச் சான்றுகள், ஏற்றுமதி இறக்குமதி, இலக்கியவளர்ச்சி மதநம்பிக்கைகள் ஆகியன பற்றி பேசும் பகுதி இரா நாதபுரம் மாவட்டத்தோடு தொடர்புடையனவாக காட்டிச் செல்லும்,அழகு சிறப்புடையதாக உள்ளது. இது ஒவ்வொருவரும் அறியக் கூடிய செய்தித் தொகுப்பு என்பது வெளிப்படை. i = விடுதலைப்போர், மறவர் வாழ்க்கை ஆகியவற்றை விளங்கும் பகுதி அன்றைய மக்களின் நிலையை தடுத்துக் காட் டுவனவாகவும் அமைகின்றன. விடு எலைக் கைதிகளின் பட்டியல் ஊர்வாரியாகக் கொடுத் திருப்பதை எண்ணிப் பார்க்கும்போது ஆசிரியரின் உழைப்பு தெற்றெனப் புலகிைறது. - == கல்வெட்டுகள், செப்பேடுகள் தரும் செய்திகளை தொகுத்துத்தந்திருப்பது ஆய்வுலகியது பயனுடை யது என்பதில் ஐயமில்லை. இவ்வாறு இராமநாதபுரம் மாவட்டத்தின் வரலா ஆசிரியரின் அனுபவத்தின் சாரமாகவும், தேர்ந்த கல்வியின் விளைவாகவும் உள்ளது. இம் மாவட்டத் தின் மண்வாசனையை அறியாதவர்கள் கூட இந்நூலைப் பயில தெளிவு பெறுவர். அழகு மொழியுடன் நடை போடும் இந்நூலே ஒவ்வொருவரும் கற்பது இன்றி யமையாதது. - ந. சஞ்சீவி 18- 12–8.;