பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 = அருமைத் தமிழையும், அருக நெறியையும் போதித்த) இவர்கள் கடிகைகளையும் பள்ளிகளையும் மடங்களையும் பல இடங்களில் நிறுவினர். அவற் றி ன் வளர்ச்சிக்கு சோழபாண்டிய மன்னர்கள் பல ஊர்களை இறையிலி யாக வழங்கினர். அவை பள்ளிச் சந்தம் என வழங்கப்பட்டன. டி. நமது மாவட்டத்தில் இவை மிகு தியாக பரு த் திக்குடி நாட்டிலும், .ே வ ம் பு வளநாட்டி லும் அமைந்து இ ய ங் கி ன. இ ன் ைற ய க மு தி, அருப்புக் கோட்டை, கிருச்சுமி வட்டங்களே அந்தப் பகுதிகள். எட்டாம் நூற்ருண்டைய பள்ளி மடம் கல்வெட்டு இந்த உண்மையை உணர்த்துகிறது. அனல் வாதத் திலும், புனல் வாதத்திலும் சம்பந்தரிடம் தோல்வி யுற்ற சமணர்கள் மதுரைக்குப் பிறகு அடுத்த புகலிட் மாக இப்பகுதியில் குடியேறியிருக்க வேண்டும். அவர் களுக்கு பாண்டியன் மாறஞ்சடையன் தக்க உதவிகளை வழங்கினன். கோவிலாங்குளத்தில் உள்ள இன்னெரு கல்வெட்டி லிருந்து இப்பகுதி சமணத்துறவிகளும் மகாவிரதினி ளும் விரும்பி வாழ்ந்த பகுதியாக வவிளங்கியது தெரிகிறது. இதனைப்போன்று இம்மாவட்டதின் வட சிமுக்குப் பகுதியும் அருக சமயத்திற்கு ஆதரவு தந்த தாகத் தெரிகிறது. இளேயான்குடி, ஆனந்துார். அனுமந்தக்குடி, திருக்களாக்குடி, பி ர ா ன் ம லை கீழப்பனேயூர், ஆகிய சிற்றுார்களில் காட்சியளிக்கும் சமணத் துறவிகளது க ல் திருமேனிகள் இந்த உண்மையை உறுதிப்படுத்துகிறது. சீ (சை) னங்குடி . சீ (சை) னமங்கலம், சாத்தப்பள்ளி. சாத்தனுார் , சர்த்தன்குளம், சாத்தமங்கலம் , அ ச் ச ன் கு ள ம், அச்சன்குடி, அறப்போது, நாகணி, தாகனேந்தல்.