பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 திருமலை நாயக்கரது தளபதி ராமப்பையனுக்கும் ராமநாதபுரம் மன்னர் இரண்டாவது சடைக்கன் சேதுபதிக்கும் போர் நடைபெற்றது. (1639) முதலாவது உலகப் போரில் நேச நாடுகளின் உதவிக்காக இராமநாதபுரம் மன்னர் முத்துராம லிங்க சேதுபதி விமானம் ஒன்றை வாங்கி ராம்நாட் என்று பெயர் சூட்டி வழங்கியது. (1915 வெள்ளைப் பரங்கியர்க்கு எதிராக துரத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே சுதேசிக் கப்பல் சேவை ஒன்றைத் துவக்க திரு வ. உ. . சிதம்பரம் முயன்ற பொழுது இராமநாதபுரம் வள்ளல் பாண்டித் துரைத் தேவர் ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமான தொகையை மூலதனமாக வழங்கியது. (1915) தென்னிந்திய ரயில்வே கம்பெனியினல் தனுஷ் கோடிக்கும் தலைமன்னருக்கு மிடையே கப்பல் போக்குவரத்துத் துவக்கம் (1916) உள்ளாட்சி இயக்கத்திற்கு பலத்த ஆதரவு, இராம நாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி மன்னரது இயக்க நடவடிக்கைகள். (1916) ஒத்துழையாமை இயக்கம் தீவிரம் பெற்று மது விலக்கு, அந்நியத் துணிக் கடைகள் மறியல். (1920) காந்தியடிகளும் அலிசகோதரர்களும் சுற்றுப் பயணம் செய்து மக்களிடம் விழிப்பை ஏற்படுத்தி னர். திராவிடக் கழகம், பொதுவுடைமை இயக்கம். அரிசன முன்னேற்றம் ஆகியவைகளுக்கான தீவிர பிரச்சாரம்.