குடும்பப் பழமொழிகள்/மரணம்

விக்கிமூலம் இலிருந்து

மரணம்

மரணத்தின் காரணம் பிறப்பு. - பௌத்தம்

மனிதன் பிறந்தவுடன் மரிக்கத் தொடங்குகிறான்.

- இங்கிலாந்து

இறந்தவனுக்குக் குளிரில்லை. -( , , )


திடீர் மரணம் திடீர் இன்பம் -( , , )

வைத்தியருக்கும் மரணம் உண்டு. -( , , )

மரணத்தறகு அஞ்சுபவன் வாழ்பவனாகான். -( , , )

பிறப்பது போலவே, இறப்பதும் இயற்கை. -( , , )

முற்றும் கனிந்த கனி முதலில் விழும். -( , , )

பிறக்கும் பொழுதுதான் நாம் அழுகிறோம், மரிக்கும் பொழுதன்று. -( , , )

எல்லா மனிதரும் சீரஞ்சீவிகளா யிருக்கவே விரும்பு கின்றனர். -( , , )

வாழ்வில் (நன்கு) வாழாதவன் மரணத்திற்குப் பின்னும் வாழமாட்டான். -( , , )

மறு வாழ்க்கையை அலட்சியம் செய்பவன் இந்த வாழ்க்கைக்குத் தீங்கிழைக்கிறான். - யங்

நித்தியமான வாழ்க்கையைத் தவிர வேறில்லை என்றே நான் நினைக்கிறேன் என்பதைச் சத்தியமாய்ச் சொல்லுகிறேன். -விட்மன்

நித்தியமான வாழ்க்கையை விரும்புதல் ஒரு பெரிய தவறுதலை நிரந்தரமாக நிலைக்கும்படி செய்வதாகும்.

-ஷேக்ஸ்பியர்

நீயோ புழுதி, புழுதிக்கே நீ திரும்பவேண்டும். -ப. ஏற்பாடு

இலை வாடுவது போல், நாம் அனைவரும் வாடிவிடுவோம்.
-( , , )

மரணம் கொம்பு ஊதிக் கொண்டு வருவதில்லை. -டென்மார்க்

அதிருஷ்டம் சிலருக்கே உண்டு, மரணம் எல்லோர்க்கும். உண்டு. -( , , )

ஒருவருக்காக மற்றொருவர் உயிர் துறக்க முடியாது.

-ஃபிரான்ஸ்
பாம்பு சாகும் பொழுதே அதன் விடமும் செத்துவிடும்.
-( , , )

மரணம் என்பது புனிதமான உறக்கம். - கிரீஸ்

பகலை இரவில் புகழுங்கள், வாழ்வை முடிவில் புகழுங்கள்.
-( , , )

புகழ் பெற்ற மனிதர்க்கு உலகு அனைத்துமே சமாதி. -( , , )

மரணம் ஆண்டிக்கும் உண்டு, போப்பாண்டவருக்கும் உண்டு. - இதாலி

இறந்தவன் ஒருவனைத் தூக்க நாலு பேர் வேண்டும். -( , , )

ஆறடி நிலம் அனைவரையும் சமானமாக்குகின்றது. -( , , )

மரணம் மருத்துவருக்கு அஞ்சாது. -லத்தீன்

ஓடுகிறவனுக்கு முன்னால் மரணம் ஓடி நிற்கும். -( , , )

மரணம்- வாழ்க்கையின் வாயில். -( , , )

இறந்தவனுக்கு மரியாதை நம் நினைவு, கண்ணீர் அன்று.
-( , , )

மரணத்தின் நினைவோடு வாழ்வாயாக. -( , , )

செத்தவனைத் தொடர்ந்து கொன்றவனும் விரைந்து செல்கிறான். -லத்தீன்

தன் காலம் முடியாமல் எவனும் இறப்பதில்லை. -யூதர்

இளைஞர் இறக்கக்கூடும், முதியோர் இறந்தே ஆகவேண்டும். -( , , )

வீட்டிலே மருந்து இருக்கிறது, ஆனாலும் நாம் மரிக்க வேண்டியவர்களே. - இந்தியா

பிறப்பதற்கு ஒரு நாளுண்டு, இறப்பதற்கும் ஒரு நேரமுண்டு. -சீனா

பிறத்தல் என்பது வெளியே வருதல், இறத்தல் என்பது திரும்பிச் செல்லல். -( , , )

மரணம் நமது விருந்தாளி. - குர்திஸ்தானம்

மனிதன் பிறக்கும் பொழுது, அவன் அழுகிறான், மற்றவர்கள் சிரிக்கிறார்கள்; அவன் இறக்கும் பொழுது, அவன் சிரிக்கிறான், மற்றவர்கள் அழுகிறார்கள். -ஜெர்மனி

சவப் பெட்டி தொட்டிலின் சகோதரன். -( , , )

(நாள் பார்த்துவர) மரணத்திடம் பஞ்சாங்கம் கிடையாது.
- இங்கிலாந்து

செத்த மீன்கள் வெள்ளத்தோடு பேயாவிடும். -( , , )

மரணமே உலகின் யசமானன். - அயர்லந்து

மரணம் உண்மையே பேசும். -பல்கேரியா

மரணமில்லாவிட்டால், வாழ்க்கை அற்புதமானதுதான்.
-( , , )

அவன் பாயைச் சுருட்டும் நேரம் வந்து விட்டது. -ஜெர்ஸீ

[மரணத் தருவாய்]

மனிதன் மரணத்தின் குழந்தை. - எஸ்டோனியா

சட்டை உடம்போடு ஒட்டியிருக்கும், அதைவிட ஒட்டியுள்ளது மரணம். -எஸ்டோனியா

பிறப்பைத் தப்ப முடியாதவன் இறப்பையும் தப்பமுடியாது.
- பின்லந்து

உலகத்தைவிட்டு வெளியேறுவதற்குப் பல வழிகள் இருக்கின்றன; ஆனால் இங்கு வருவதற்கு ஒரே வழிதான் உண்டு. -போர்ச்சுகல்

மரணத்திற்கு விலை உண்டு; வாழ்வைக் கொடுத்து மரணத்தை வாங்க வேண்டியிருக்கிறது. -ரஷ்யா

மரணம் வீட்டுக்கு வந்துவிட்டால், மரண அவஸ்தை தீர்ந்தது. -( , , )

கண்ணீர் உயிரைப் பிடித்து வைக்க முடியாது. - ஆப்பிரிகா

செத்தவற்றிலும் உயிருள்ளவை இருக்கும், உயிருள்ளவைகளிலும் இறந்தவை இருக்கும். -( , , )

மரணம் வீட்டின் உடைமைக்காரன், அந்நியனல்லன்.
-( , , )

தொடர்ந்து நடுங்கிக் கொண்டிருப்பதைவிட, ஒரேயடியாக மரித்தல் மேலானது. -கிரீஸ்

மனிதர் நியாயமற்ற முறையில் மரணத்தை வெறுக்கின்றனர்; அவர்களுடைய பல துயரங்களுக்கும் அதுவே காப்பாயிருக்கின்றது. -( , , )

மரணத்தில் பயங்கரம் ஒன்றுமில்லை, கேவலமான மரணமே அத்தகையது. -( , , )

நல்ல மரணம் வாழ்வு முழுவதும் பெருமையளிப்பது.

- இதாலி

உழைப்பு, கவலைகளிலிருந்து ஓய்வு பெறுவது மரணம்.

-லத்தீன்

மரணம் எல்லாப் பொருள்களையும் சமமாக்குகின்றது. -( , , )

மரணம் உனக்காக எங்கே காத்திருக்கும் என்பது நிச்சயமில்லை; ஆதலால் அதை எங்குமே எதிர்பார்க்க வேண்டும். -லத்தீன்

போய் விட்டான் என்று நீங்கள் சொல்பவன் (நமக்கு) முன்னால் போய் நிற்கிறான். -( , , )

உன் கடைசி நாளை எண்ணி அஞ்சவும் வேண்டாம், அதை விரும்பவும் வேண்டாம். -( , , )

இறந்தோரைப் பற்றிப் பெருமையாக மட்டும் பேசு. -லத்தீன்

மரணத்திற்கு மருந்தில்லை. -( , , )

மரணம் வயது முதிர்ந்ததைக் கொண்டு போவதில்லை, பழுத்ததையே கொண்டு போகின்றது. -ரஷ்யா

மரணம் குட்டிகளையும், ஆடுகளையும் சேர்த்து விழுங்குகின்றது. - ஸ்பெயின்

மரணம் உண்மையைப் புலப்படுத்துகின்றது. - யூதர்