குடும்பப் பழமொழிகள்/உலக அனுபவம்

விக்கிமூலம் இலிருந்து

உலக அநுபவம்

வீடுதோறும் மண் அடுப்பு உண்டு. - இந்தியா

மனிதன் நனைந்தா லொழியக் குடிசை கட்ட மாட்டான்;

தலையில் தட்டி வீங்கினா லொழியக் குனிய மாட்டான்.
-( , , )
மரத்திலே பானை செய்தால், ஒரு முறை தான் சமைக்கலாம்
-( , , )

உலகம் யானைக்கே உதவி செய்யும், எறும்பை மிதித்து நசுக்கிவிடும். -( , , )

ஒவ்வொரு நிமிடமும் உலகை உற்றுப் பார்த்தால், எவர்களைப் பாராட்டுவது, எவர்களிடம் துக்கம் விசாரிப்பது? -( , , )

நீ ரோட்டியுடன் சர்க்கரை சேர்த்து உண்ண வேண்டுமானால் உலகைப் புகழ்ந்து பேசு. -( , , )

பாதிக் கோழியை கறிவைத்து, பாதியை முட்டையிட வைத்துக் கொள்ள முடியாது. -( , , )

நண்பனை வறுமையில் அறியலாம், வீரனைப் போரில் அறியலாம், யோக்கியனைக் கடனில் அறியலாம், மனைவியைச் செல்வமிழந்த நிலையில் அறியலாம், பந்துவை இடுக்கண் வருங்கால் அறியலாம். -( , , )

நாவிதரில் பழையவன், வண்ணாரில் புதியவன். -( , , )

பத்து மனிதர்-பத்து நிறம். - ஜப்பான்

மூடு பனியை விசிறியால் விரட்ட முடியாது. -( , , )

கற்கள் மிதக்கும் பொழுது, இலைகள் அழிந்துவிடும். -( , , )

திறமையுள்ள நீச்சல்காரர்கள் நீரிலே மடிவார்கள், திறமையுடன் சவாரி செய்பவர்கள் வேட்டையிலே மடிவார்கள் -ஜப்பான்

பத்து நாளில் சூடாக்கியது ஒரே நாளில் குளிர்ந்து விடும்.
-( , , )

பண்டைக்காலம் முதல் மாறாமல் இருப்பவை: நீரின் ஓட்டமும் காதலின் போக்கும். -ஜப்பான்

ஆயிரம் உபதேசங்களைவிட ஓர் அநுபவம் பாடம் கற்பிக்கும். - துருக்கி

(கோவேறு) கழுதை மேலுள்ள பாரத்தில் சேணத்தைச் சேர்த்துக் கணக்கிடுவதில்லை. -( , , )

உலகிலே ஆதாயம், புகழ் என்ற இரண்டு பேர்கள் மட்டுமே ஓடிச் சாடித் திரிகிறார்கள். -சீனா

வீட்டுக்குள்ளே வண்டி செய்யலாம். ஆனால் அதைப் பாதையிலே தான் ஓட்டவேண்டும். -( , , )

உலகம் முழுவதும் காகம் கருமைதான். -( , , )

நாயின் வாயில் தந்தம் இராது. -( , , )

சேற்றில் ஓர் அடி வைப்பதை விட, பத்தடி சுற்றிச் செல்வது மேல். -( , , )

வல்லவர்களை அடக்க வல்லவர்கள் உண்டு; திறமைசாலிகளைத் தொடர்ந்து திறமைசாலிகள் வருவார்கள்.
-( , , )

வீட்டுக்கு வெளியிலே மனிதருக்கு மதிப்பு குறையும், சரக்குகளுக்கு மதிப்புக் கூடும். -( , , )

நீர் கப்பலைத் தாங்கும், அதுவே கப்பலைக் கவிழ்க்கவும் செய்யும். -( , , )

வண்டி வந்தால், வழி உண்டாகும். -( , , )

வழியை அடைத்து வேலி போட்டால், ஜனங்கள் அதில்

ஏறிக் குதிப்பார்கள், வழியை திறந்து வைத்தால், வேலியை உடைப்பதற்கு வேறிடம் பார்ப்பார்கள்.
சீனா

ஒட்டகத்தின் மேலிருப்பவன் திட்டங்கள் போடுகிறான், ஒட்டகத்திற்கும் திட்டங்கள் உண்டு. -அரேபியா

ஈச்ச மரத்திற்கு வேர் தண்ணீரிலும், உச்சி வெய்யிலிலும் இருக்க வேண்டும். -( , , )

செத்தது நாய் தான், ஆனால் சவ ஊர்வலம் மிக நீளம்

-அரேபியா

யூதனுடன் சாப்பிடு, ஆனால் கிறிஸ்தவன் வீட்டில் படுத்துறங்கு. -( , , )

நீதிபதியின் குதிரை (கோவேறு கழுதை) இறந்தால், எல்லோரும் சென்று துக்கம் விசாரிப்பர்; நீதிபதியே இறந்து போனால், ஒருவரும் போகமாட்டார். -( , , )

நீ மிகவும் மென்மையாயிருந்தால், உன்னைக் கசக்கிப் பிழிந்து விடுவார்கள்; நீ விறைப்பாயிருந்தால், உன்னைத் தகர்த்து விடுவார்கள். -( , , )

கிணற்றைப் பனி நீரால் நிரப்ப முடியாது. -( , , )

ஒட்டகை மேல் உள்ளவனுக்கு முதுகு கூனலில்லை.

-ஆர்மீனியா
ஒரு மேட்டை வெட்டினால்தான் ஒரு பள்ளம் நிரம்பும்.
-( , , )

எங்கோ உள்ள ஃபீனிக்ஸ் பறவையைவிட உள் நாட்டுக் காகம் மேலானது. -கீழ் நாடுகள்

[ஃபீனிக்ஸ் பறவை இறந்த பின்னும் உயிர் பெறுமாம்; இது கவிஞர்களின் கற்பனை.]

வாள், பெண், பெட்டைக் குதிரை, தண்ணீர் - இவைகளில் நம்பிக்கை வைக்க வேண்டாம். -ஆப்கானிஸ்தான்

நல்ல கனியிலிருந்து கசக்காமலே சாறு வரும். -பாரசீகம்

மாவுத்தன் யானைகளாலேயே சாவான், முதலைகள் வளர்ப்பவன் அவைகளாலேயே சாவான், பாம்பாட்டி பாம்புகள் கடித்தே சாவான். -சயாம்

போகும்போது பாதை கரடுமுரடு, திரும்பும்போது மென்மையாகிவிடும். - தாய்லந்து

தெரிந்த மனிதனின் குணத்தை நாம் போற்றுவோம், தெரியாத மனிதனின் அங்கியைப் போற்றுவோம்.
-( , , )
தேசத்தைப் போல மொழி, அரசனைப் போலப் பிரஜைகள், தாயைப் போல மகள், விதையைப் போல முளை.
-பார்சி

சேற்றிலிருப்பவன் கரையிலிருப்பவனையும் சேர்த்து இழுத்துக் கொள்வான். - ஃபிரான்ஸ்

இரண்டு சனிக்கிழமைகளுக்கு இடையிலே எத்தனையோ அற்புதங்கள் நிகழ்கின்றன. -( , , )

ஒரு பையிலுள்ள அரிவாள், பூட்சுக்குள் இருக்கும் துரும்பு, சாளரத்தின் அடியிலுள்ள பெண்- இவைகள் தாம் இருப்பதை அறிவுறுத்திக் கொண்டே யிருக்கும்.

- ஜெர்மனி

இந்தக் காலத்தில் சுவர்க்கத்திற்குப் போனால்தான் நாம் தேவர்களைச் சந்திக்க முடியும். - போலந்து

பூட்ஸ் தேய்வதைவிடப் பாதங்கள் தேய்வது நலமென்றே செல்வர்களும் ஏழைகளும் சேர்ந்து சொல்லுகிறார்கள்.
-( , , )

பெரிய மரம் சாய்ந்தவுடன், ஒவ்வொருவரும் வந்து அதை வெட்டிக் கொண்டு போவர். -( , , )

நீ இனிமையா யிருந்தால், உன்னை விழுங்கி விடுவார்கள்; கசப்பா யிருந்தால் உன்னை வெளியே துப்பிவிடுவார்கள். -( , , )

தாடியுள்ள பெண்களையும், தாடி வளராத ஆண்களையும் நம்ப வேண்டாம். -பாஸ்க்

கேள்வி, கவனம், மௌனம், பொறுமை - இவை நீ கேளாமலே எல்லாவற்றையும் உனக்குக் கற்பிக்கும்.

-பெல்ஜியம்

தானாக ஓடுகிற வண்டியைத் தள்ளிவிட ஆள் சேரும்.

- ஸ்காட்லந்து
ஓர் அறையிலே மரணம்; அடுத்த அறையிலே வாரிசுரிமை.
-( , , )

பாட்டன் வாங்குகிறான், தந்தை கட்டுகிறான், மகன் விற்கிறான், பேரன் பிச்சையெடுக்கிறான். -( , , )

நெட்டையா யிருந்தால் இராட்சசன் என்பார்கள்; குட்டையாயிருந்தால் குள்ளன் என்பார்கள். -வேல்ஸ்

தந்தையும் தாயும் நமக்குப் பேசக் கற்பித்துள்ளனர்; உலகம் வாயை மூடிக் கொண்டிருக்கக் கற்பித்துள்ளது.

- ஸெக்

இருபதில் அழகன், முப்பதில் பலசாலி, நாற்பதில் செல்வந்தன், ஐம்பதில் அறிவாளி என்றில்லாதவன், பின்னால் அவ்வாறு ஆக முடியாது. -( , , )

எல்லாவற்றையும் தராசில் நிறுக்க முடியாது. - டென்மார்க்

இறக்கிறவர்கள் உள்ள இடத்திலேயே வாரீசுகளும் இருக்கிறார்கள். -எஸ்டோனியா

உனக்கு மேலானவரிடமிருந்து ஒதுங்கியிரு. - கிரீஸ்

வைத்தியர்கள், மூடர்கள், உபதேசம் செய்பவர்கள் இந்தத் தொழில் பார்ப்பவர்களே அதிகம். - ஹங்கேரி

முன்னேறாதவன் பின்னேறுகிறான். -லத்தீன்

வயிறு நிறைந்தவனும் பட்டினி கிடப்பவனும் ஒரே பாட்டைத் தான் பாடுகிறார்கள். -நார்வே

வானம் என்னைப் படைத்தது, பூமி என்னைத் தாங்குகின்றது. -ரஷ்யா

தெரிந்ததை யெல்லாம் சொல்லாதே, கேட்டதை யெல்லாம் நம்பாதே, முடிந்ததை யெல்லாம் செய்யாதே.

-போர்ச்சுகல்

பாதி உலகம் துள்ளுகின்றது, பாதி அழுகின்றது. -ரஷ்யா

வீடுதோறும் புகைக்கூண்டு கறுப்பாய்த்தான் இருக்கும்.

- செர்பியா
ஒவ்வொரு கிராமமும் தன் பாட்டையே பாடுகின்றது.
-( , , )

உலகத்தின் இயல்பு இப்படி யிருக்கிறது; பணம் ஒருவன் கையில், பை மற்றொருவன் கையில். -சைலீஷியா

வக்கீலிடம் பற்று அதிகமானால் செல்வம் குறைந்து விடும்; வைத்தியரிடம் பற்று அதிகமானால் ஆரோக்கியம் குறைந்துவிடும்; பாதிரியாரிடம் பற்று அதிகமானால் கௌரவம் குறைந்து விடும். -ஸ்பெயின்

வெய்யிலும், துக்கங்களும், விருந்துகளும் சவக்குழிகளை நிரப்புகின்றன. -( , , ) பலர் முகர்ந்த

ரோஜாவில் மணம் இராது. -( , , )

அநுபவத்தை ஆண்டுகளைக் கொண்டு கணக்கிட முடியாது, ஏனெனில் ஒரு மணி நேரத்தில் பல ஆண்டுகளைக் கடத்தி விடலாம். -ஸ்விட்சர்லந்து

ஒருவன் யாத்திரை போய்ப் போய்க் கடைசியில் தன் வீட்டுக்கே வருகிறான்; ஒருவன் வாழ்ந்து வாழ்ந்து கடைசியில் பூமிக்கே திரும்புகிறான். -ஆப்பிரிக்கா

எதிலும் அநுபவமில்லாதவர்களுக்கு அழுகுரலும் பாட்டாகத் தோன்றும். -( , , )

இந்த உலகத்தில் மூன்று நண்பர்கள் இருக்கிறார்கள்; தைரியம், புத்தி, நுண்ணறிவு. -ஆப்பிரிகா

உன்னை நேசிப்பவன் களைப்படையச் செய்கிறான், துவேஷிப்பவன் கொன்றுவிடுகிறான். -( , , )

நாவிதரில் பழையவன், வண்ணாரில் புதியவன். - இந்தியா

நீரிலே ஆழ்பவர்களைக் காட்டிலும் நிலத்திலே ஆழ்பவர்கள் அதிகம். - ரஷ்யா