பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= I 34 பழக்கத்தையும் கொண்டிருந்தனர். இ. பி. 1710ல் கிழவன் சேதுபதி இறந் த பொழுது அவரது மனைவிகள் அனைவரும் தீப்புகுந்த சோக நிகழ்ச்சியை இராமநாத புரம் மானுவல் என்ற நூல் விவரிக்கிறது. மறவர்களில் மூத்தகுடியாக சேதுபதி மன்னர்கள் விளங்கிவந்தனர். இந்த மக்களது அன்புக்கும் மரி மரியாதைக்கும் என்றென்றும் உரியவர்களாக இந்த மன்னர்கள் வி ள ங் கி ய த ா ல் ப தி ேன ழ ா ம் நூற்ருண்டில் பெரிய மறவர்சீமை தன்னேரிலாத தன் னரசாக விளங்கியது. சேதுபதி மன்னர்களது ஆணை பிறபிக்கப்பட்டால் இரண்டே நாட்களில் இருபதுமுதல் முப்பது ஆயிரம் திண்தோள் மறவர்கள் அணி திரளும் வாய்ப்பு இருந்தது. . இவ்விதம் மிகக்குறைந்த கால அளவில் திரட்டப்பட்ட மறவர் அணியொன்று கி. பி. 1659ல் ரகுநாத திருமலை சேதுபதி தலைமையில் மதுரைக்குச் .ெ ச ன் று மதுரைக் கோட்டையை முற்றுகை இட்டிருந்த மைசூர் படைகளை முறியடித் தனர். அவர்களை கொங்குநாடு வரை துரத்திச் சென்று மதுரை அரசின் எல்லைக்கு அப்பால் விரட்டி விட்டு திருமலை மன்னருக்கு ஏற்பட்ட நெருக்கடியை நீக்கியது. - இத்தகையதொரு நெருக்கடி திருச்சியில் ஆட்சி புரிந்த மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கருக்கு ஏற்பட்டபொழுதும் இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதியின் தலை மையில் சென்ற மறவர்படை திருச்சியில் கோட்டையை எதிரிகளிடமிருந்து விடுவித்து நா யக் க ம ன் ன ரையும் காப்பாற்றியது. இவைபோன்று தமிழக வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்திய நிகழ்ச்சி பலவற்றுள் இராமநாதபுரம் சீமையில் மறவர்படை