பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைப் போராட்டம் அடிமைப்பட்ட நமது நாட்டை ஆங்கில ஏகாதிபத் தினின்றும் மீட்பதற்காக கி. பி. 1945 வரை பல இயக்கங்கள், போராட்டங்கள், புரட்சிகள் நடை பெற்றன. மகாத்மா காந்தியின் தலைமையில் இந்திய தேசிய இயக்கம் நாட்டுணர்வை வளர்த்து மக்கள் அனைவரையும் இன, மொழி, மதம், சாதி என்ற வேறுபாடுகளைக் களைந்து ஒரே கொடியின் கீழ் ஒற்றுமைப் ப டு த் தி நிறுத்தியது. கிலாபத் இயக்கம் (1921) ஒத்துழையாமை இயக்கம் (1930) கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணி எதிர்ப்பு மறியல் (1932) நாக்பூர் கொடிப் போராட்டம், நீல்ன்சிலை அகற்ற மறியல், தனிநபர் மறியல்: (1941) போர் உதவி எதிர்ப்பு இயக்கம் (1940). பம்பாய் கடற்படையினர் புரட்சி (1945) விமானப் படையினர் புரட்சி (1945) என்ற இயக்கங்களின் வாயிலாக அந்நிய ஆட்சியாளர்களுக்கு இந்திய ஜனசக்தியின் ஒ ன் று ப ட் ட குரலை, உணர்வை, உறுதியை உணரும் நிலை ஏற்பட்டது. இன்னும் பஞ்சாபின் கத்தார் சங்கம், சிட்டகாங் இளைஞர் அ ன வ ங் க புரட்சிக்குழு. இந் தி ய சோஷியலிஸ்ட் இயக்கம் என்று இனங்காட்டக்கூடிய இளைஞர் அமைப்புக்கள், இந்தியாவிலும், வெளிநாடு களிலும் தங்களது தீவிர நடவடிக்கைகளினலும் தியாகங்களிலுைம் ஆட்சியாளர்களின் ஆதிக்கப் பிடியை தளர்த்துமாறு நிர்ப்பந்தித்தன. இவை யனைத்தும் இந்திய விடுதலை இயக்கம் என்ற நெடிய பயணத்தின் இடைவெளிகளாகும்.