பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல் வெட்டுக்களில் கண்ட செய்திகள் 1 ஒன்பதாம் நூற்ருண்டில் பள்ளிமடம் பகுதியில் பயன்படுத்தப் பட்ட நாழியின்பெயர் சோழாந் தகநாழி என்பது. சோழாந்தகன் என்பது வீரபாண்டிய மன்னனது பெயர் -ஏ. ஆர். 423 - 1914 2 திருப்புல்லாணி தெய்வச்சிலைப் பெருமாள்' கோயிலில் நந்தாவிளக்கு தர்மத்திற்காக நாள் ஒன்றிற்கு ஆழாக்கு நெய் வழங்குவதற்காக திருப்புல்லாணி இடையரிடம் மிழலைக்கூற்றம் கூத்தன் திருமங்கை ஆழ்வான் ன்ன்பவர் கொண்டுவிட்டது எழுபது ஆடுகள். (கி.பி. 1082) -ஏ. ஆர். 107-1903 3 திருப்புத்துார் ஆலய அறங்காவலர்கள் அனை வரும் முக்கியமான காரி யமாக மதுரை சென்று மன்னரைச் சந்தித்துப் பேச புறப்பட்டனர். அவர்களது வழிச் செலவிற்காக கோயிலுக்குச் சொந்தமான காணி ஒன்றிற்காக ஒரு குறிப் பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்டு அந்த காணிக்கு வரிவசூலில் இருந்து விலக்கு அளித்தனர். இந்த நிகழ்ச்சி கி.பி. 11.98 இல் நிகழ்ந்தது. ஏ.ஆர். 103 - 1908 4 கீழ்ச் செம்பிநாட்டு பவித்திரமாணிக்கப் பட்டி னத்தின் கீழ்பால் அமைந்திருந்த சோனக சாமந்தரது பள்ளிவாசலுக்கு ஆம்புத்துார்