பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகனின் சரிதை

13

யான கதை! தர்மத்தைப் போதிக்க வேண்டுமென்ற உத்தேசத்துடன் தொகுக்கப்பட்ட இதிகாசங்களுக்கு இக் கதைகள் எவ்வளவு உசிதமாயிருக்கின்றன ! சரித்திர சம்பவங்கள் தர்மீய நோக்கத்துடன் எழுதப்படும் புராணங்களில் இவ்வித மாறுதல் அடைதல் இயற்கையல்லவா?

இக் காரணங்கள்பற்றி நம்முடைய முடிவு என்னவென்றால், அசோகன் தன் அரசாட்சியை ஆரம்பித்த பொழுது கொடுங்கோலனாயிராமல் தனது வீரபராக்ரமத்தில் நம்பிக்கையும் வேட்டையாடுதல் முதலிய வியாயாமங்களில் அபிலாஷையும் அயல் நாடுகளை ஜயிக்க வேண்டுமென்ற நோக்கமுமுடைய சாதாரண அரசனாயிருந்தான். புத்த பகவானுடைய காற்று அவன்மேல் அப்போது அடிக்காததால் ஆகார விஷயமாகவும் தெய்வ ஆராதனைக்காகவும் அரசனுடைய அரண்மனையில் பிராணிவதை நடந்து வந்தது[1]. அசோகனுடைய பதினான்காவது பட்டாபிஷேக வருஷத்தில் எழுதப்பட்ட ஐந்தாம் சாஸனத்திலிருந்து அரசனுடைய சகோதர சகோதரிகள் அப்போது வாழ்ந்து வந்தனரென்று நாம் அறிகிறோம். அதனால் அசோகன் தனது உறவினர் யாவரையும் கொலைசெய்த விவரம் நம்பத்தக்கதல்ல. பிந்துஸாரன் இறந்ததும் அசோகன் உடனே அடுத்த அரசனாவதற்குத் தடை யிருந்தது உண்மையாயிருக்கலாம்; சகோதரர்களுக்கிடையில் சண்டை சச்சரவுகள் நடந்திருக்கலாம்; இவ்வளவு தான் நாம் ஐதிஹ்யத்திலிருந்து கிரகிக்கக் கூடியது. அரசுரிமை கைபற்றியதைக் குறித்துள்ள மற்ற விவரங்கள் உண்மையெனத் தோன்றவில்லை.

  1. முதற்சாஸனம்.