பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

பிட்டேனல்லவா? அந்த நாளில் இவ்வேடங்களை நடிப்பதில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லையெனச் சுவாமிகள் பெயர் பெற்றிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

நல்ல உடற்கட்டும், எடுப்பான தோற்றமுமுடைய சுவாமிகள் வேடந்தாங்கி மேடையில் நிற்கும்போதே பார்ப்பதற்குப் பயமாக இருக்குமாம். ஆவேசத்துடன் நடித்துத் தமது கெம்பீரமான குரலை உயர்த்திப் பேசும் போது சிறு குழந்தைகள் அலறி விடுவார்களாம்.

சுவாமிகள் இவ்வேடங்களில் நடித்த காலத்தில் நிகழ்ந்த சில அதிசயமான சம்பவங்களைப்பற்றிச் சுவாமிகளின் மாணாக்கர்களில் ஒருவரான எனது தந்தையார் பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன். எதிர்பாராத நிலையில் யாராவது திடீரென்று வந்து பயமுறுத்தும் போதோ, அல்லது அதிர்ச்சி யுண்டாக்கத் தக்க பெரும் சத்தத்தைக் கேட்கும்போதோ, “அப்பா ! கர்ப்பம் கலங்கி விடும் போலிருக்கிறதே!” என்று கூறுவதுண்டல்லவா ?

ஒருமுறை சுவாமிகள் சாவித்திரி நாடகத்தில் எமன் வேடத்தில் நடித்தபோது, சத்தியவானுடைய உயிரைக் கவர்ந்துவர முடியாமல் திரும்பிய கிங்கரர்களைக் கோபித்துக்கொள்ளும் கட்டத்தில் ஆவேசத்துடன் கூச்சலிட்டுக் கையிலிருந்த சூலாயுதத்தை ஓங்கித் தரையில் அடித்தவுடன் உண்மையாகவே சபையிலிருந்த ஒரு அம்மையாருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டு விட்டதாம். அன்று முதல் மேற்சொன்ன காட்சி நடைபெறுமுன் கம்பெனியார் மேடைக்கு வந்து, “கர்ப்பிணிகள் யாராவது இருந்தால் தயவுசெய்து இந்தக் காட்சி முடியும் வரை வெளியே சென்று விடுங்கள்” எனக் கேட்டுக் கொள்வார்களாம்.