பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகனுடைய சாஸனங்கள்

72

களுக்கு எப்போது லிபி ஏற்பட்டது? இந்தக் கேள்விக்கு ஸ்ரீபுலர் என்ற புராதன வஸ்து சாஸ்திரியின் விடை பின்வருமாறு: சுமார் கி.மு. எட்டாம் நூற்றண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கும், அதன் மேற்கிலுள்ள யூதரைப் போன்ற ஜாதியாருக்கும் வியாபார விஷபமாய்க் கடல் யாத்திரையும் சாமான்களின் போக்குவரவும் முன்னிலும் அதிகமாய் ஏற்பட்டன. இச்சாதியாரிடமிருந்தே இந்திய ஜனங்கள் எழுதும் வித்தையைக் கற்றுக்கொண்டனர். ஏனென்றால், இவர் எழுதிவந்த லிபியிலும் ப்ராம்மி லிபியிலும் சில எழுத்துக்கள் வடிவிலும் உச்சரிப்பிலும் ஒத்திருக்கின்றன.

ஆனால் ப்ராம்மியி லுள்ள எல்லா எழுத்துக்களும் கடனாகக் கிடைத்தவை யல்லவென்று ஸ்ரீபூலரும் ஒப்புக் கொள்ளுகிறார். இந்தியர் தங்களிடமிருந்த புது உச்சரிப்புக்கு அவசியமான குறிகளைத் தாமே ஏற்படுத்திக் கொண்டனர். வியாபாரிகள் தாம் கற்ற புது வித்தையை முதலில் ஞாபகக் குறிப்புகளுக்கு உபயோகப்படுத்தினார்கள். பனையோலையும் பூர்ஜபத்திரமும் செம்பு போன்ற லோகத்தகடுகளும் இந்நாட்டில் எழுதுவதற்கு ஸாதனங்களாயின. லிபி வழக்கத்தில் வந்த பிறகும் மதக் கிரந்தங்களை இப்படிப்பட்ட ஸாதனங்களில் எழுதிவைப்பதற்கு வேதியர் துணியவில்லை. காலக்கிரமத்தில் மதசம்பந்தமான கிரந்தங்களும் எழுதப்பட்டு மனிதன் ஞாபகசக்திக்கு ஏற்பட்டிருந்த அனாவசியமான பாரத்தை கொஞ்சங்கொஞ்சமாய் ஜனங்கள் குறைத்துக்கொண்டனர்.

கரோஷ்டி லிபி யூதஜாதியாரிடமிருந்து கிடைத்ததன்று. 
கரோஷ்டி லிபி

கி. மு. ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவின் வடமேற்கிலுள்ள பிரதேசங்கள் பெர்ஸியா தேசத்தாரின் ஆதீனத்திலிருந்தன. இந்தப் பிரதேசங்களில் ஆர்மேயிக்