உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

சாஸனங்கள்

வதும் முன்னிலும் கெடாமலிருப்பதும் இரண்டும் சிறந்ததே. மனிதர் தம் குணத்தை அதிகரிக்க முயல்வதற்கும் குணம் குன்றுவதைத் தடுப்பதற்குமே இது எழுதப்பட்டுள்ளது. தேவர்களுக்குப் பிரியமான பிரியதர்சி அரசன் முடிசூடி பன்னிரண்டு வருடங்களான பின் இங்ஙனம் வரையச் செய்தார்.

மொத்தம் 12 வாக்கியங்கள். பாஹியன் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் பாடலிபுரத்தில் மிக விமரிசையுடன் நடந்த இவ்வித திருவிழாக்களை வருணித்திருக்கிறான்.