பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 மோன் சீதக்காதி’ எனச் செந்தமிழோர்க்கு கீழக் கரையைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. அவர்அங்கு அமைத்த பள்ளி வாசல் சோனக திராவிட கட்டுமானக் கலைவிருந்தாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. வள்ளல் சீதக்காதியின் ஆன்மிக குருவாக இலங்கியவர் ஸதக்கத்துல்லா அப்பா அவர்கள் கீழைநாட்டு ஏகத்துவ நெறியின் தத்துவப் பேழையாகவும், அரபு மொழி உலகம் அனைத்தும் ஏற்றிப் போற்றும் மகாகவியாகவும் வாழ்ந்த அவர்களது போதனையிலும் பயிற்சியிலும் பயன் பெற்ற இறையன்பர்களையும், புலவர் பெரும் களையும் தோற்றுவித்த பெருமை இந்த ஊரின் மண்ணுக்கு உண்டு. மாப்பிள்ளை லெப்பை ஆலிம், கவ்வத்து நாயகம், செயிது 'அப்துல் காதிர், ஆலிம் புலவர், குணங்குடி மஸ்தான் ஆகியோர் அவர்களில் சிலராவர்! ... ." . மேலும், செந்தமிழ் இலக்கியங்களான சீருப்புராணம், சின்ன சீரு, ராஜநாயகம் போன்ற ஒப்பற்ற காவியங் களின் கொடை நாயகர்களான அபுல் காசிம் மரைக் காயர், சின்ன நயினர் லெப்பை மரைக்காயர், அப்துல் காதிர் மரைக்காயர் ஆகியோர் அனைவரும் அந்தக் கிழக் கரை வள்ளல் பெருமக்களின் வழிவந்தவர்கள் ஆவர். இந்த ஊரில் சோனகரைத் தவிர சிறுபான்மையினரான மறவர்களும், பரவர்களும் உள்ளனர். போர்த்துக் கேசியர், டச்சுக்காரர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட பண்டக சாலைகளும் தேவாலயங்களும் இன்றும் சிதைந்த நிலையில் இருக்கின்றன. சங்க இலக்கியமான ஐங்குறு நூறில் தொண்டியைப் பற்றிய சில பாடல்கள் உள்ளன. அகப்பாடல் ஒன்றை யாத்த சாத்தனர் என்பவர் தொண்டியா மூரைச்