பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை


௩. திராவிட மொழிகள்—தமிழ்

" திராவிடம்” என்ற சொல் பிராகுவி[1] என்ற மொழி நீங்கலாக, கீழ்வரும் பன்னிரண்டு மொழிகளை உட்கொண்டதாகும்.

திருந்திய மொழிகள்


1. தமிழ் 4. கன்னடம்
2.மலையாளம் 5. துளு
3. தெலுங்கு 6. குடகு அல்லது கூர்க்கு

திருந்தா மொழிகள்

1. துதம் [2]  4. கந்தம் அல்லது கு [3]
2. கோதம்[4]  5. ஒராவோன்
3. கோண்டு[5]  6. இராஜ்மகால்
தமிழ் பேசப்படுமிடம்

கிராவிட மொழி யினங்களுள் மிகவும் தொன்மை வாய்ந்த திருந்திய மொழி தமிழேயாம். அது சொல்வள மிகுந்தது; பண்டைச் சொல்லிலக்கணத் தொல்வடிவங்களிற் பெரும்பாலனவற்றை இகவாதுகொண்டு மிளிர்வது. இதனாலேயே மேற்கண்ட பட்டியில் தமிழுக்குத் தலைமையிடம் அளிக்கப்பட்டது. தமிழ்மொழி செந்தமிழ், கொடுந்தமிழ் என இருவகைத்து. செந்தமிழ் என்பதைப் பண்டைத் தமிழ் என்றும், இலக்கிய வழக்குத் தமிழ் என்றும் கூறலாம்; கொடுந்தமிழ் என்பதை இன்றைத் தமிழ் என்றும், பேச்சு வழக்குத் தமிழ் என்றுங் கூறலாம். இவ்விரண்டிற்குமுள்ள வேறுபாடுகள் மிகப் பல. அவ் வேறுபாடுகளை நோக்க இவ்விரண்டும் இருவேறு தனி மொழிகள் என்று கூடக் கூறிவிடலாம். மேற்குத் தொடர்ச்சி மலைக்கும், வங்


  1. 1. Brahui. 2. Tuda 3. Kota 4. Gond 5. Khond
  2. 2. Tuda.
  3. 5. Khond
  4. 3. Kota
  5. 4. Gond.