பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

தொகுதியே பெரும் பகுதியாகும் என்பதை உணர்ந்து, அச் சொற்களைத் தனியாகப் பிரித்து முறைப்படுத்தி நாட்டு மொழிச் சொற்கள் அல்லது “செஞ்சொற்கள்” என்று பாராட்டிவந்தனர் என்பதை அவ் வாராய்ச்சியாளர் யாங்கனம் அறிந்திருப்பர்?

உண்மையில் திராவிட மொழிகளிற் காணப்படும் வட சொற்களையும், சிதைவுகளையும் பிரித்தறிதல் அரிதன்று. ஒருசில சொற்களே வட சொல்லா, திராவிடச் சொல்லா என்று ஆராய்ந்தறிதற் குரியனவாம். நீர் என்பதும் மீன் என்பதும் இரு மொழியாளராலும் தத்தம் மொழிச்சொற்கள் என்று உரிமை பாராட்டப்படுகின்றன. எனினும், இரண்டும் திராவிடச் சொற்கள் என்பதே ஏற்புடைத்தாகும்.

 


(ஒவ்வொரு மொழியிலும் நெருங்கிய உறவினர்களையும், உடலுறுப்புக்களையும், என்றும் மாறாதனவும் பொதுப்படையானவையுமான இரவு, பகல், ஞாயிறு, மரம், கல், வீடு, யானை, குதிரை போன்ற பொருள்களையுங் குறிக்குஞ் சொற்கள் அவ்வம் மொழியின் முதன்மையான சொற்களாகக் கருதப்படும். இடப் பெயர்களும் எண்ணுப் பெயர்களும் மாறுபடுதல் இயல்பாகலான் அவற்றை முதன்மைச் சொற்களோடு ஈண்டுச் சேர்ப்பதற்கில்லை. பின்வரும் பட்டியில், ஒப்புநோக்கி உயத்தறிதற் கெளிதாக வட மொழியிலிருந்தும், தமிழிலிருந்தும் 60 முதன்மைச் சொற்கள் தரப்படுகின்றன.)