பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

தில்லை. இப் பெயருரிச் சொற்கள் உண்மையில் பண்புப் பெயர்களி லிருந்து வந்தவையே யாகும். பண்புப் பெயர் என்று தனிப்பட நிற்கும்போது, அவை பிற பெயர்கள் போலவே திணை பால் முதலியவை ஏற்பினும், பிற பெயர்க ளுடன் ஒட்டப்பெற்று உரிச்சொல்லாகப் பயன்படும்போது அங்ஙனம் எற்பதில்லை.

(vii) இன்னெரு வகையில் திராவிட மொழிகள் மங்கோலியம், மஞ்சு முதலான சித்திய மொழிகளுடன் ஒத்தும் இந்து - ஐரோப்பிய மொழியினத்துடன் மாறுபட்டும் உள்ளன. அஃதாவது, இயலும்போ தெல்லாம் இம் மொழிகள் பெயருரிச் சொல்லை வழங்காமல், வினைச்சொல்லின் பெயரெச்ச உருபையே வழங்குகின்றன. (உயர் மரம் - என்பதற்கு உயர்ந்த மரம் என்பதுபோல என்க.) இவ்வழக்கத்தின் பயனாய்ப் பண்புப் பெயர்களைப் பெயருளியாக வழங்கும்போது கூட, அதனுடன் பெயருரிச்சொல் விகுதியாக ’ஆன’ என்ற பெயரெச்சம் சேர்த்துக்கொள்ளப்படு கிறது. [சிவப்பான.]

(viii) தன்மைப் பன்மையில் முன்னிலையை உட்படுத்தியும் உட்படுத்தாமலும் இரண்டு வகைகள் திராவிட மொழிக்கும்,சித்திய மொழிகளுக்குமே சிறப்பாக இருக்கின்றன. வட மொழியிலும், இந்து - ஐரோப்பிய மொழியிலும் இங்ஙனம் இல்லை. இதனை யொப்பதாய் ஒருவாறு குறிக்கக்கூடியது பிற்குறித்த மொழிகளிலுள்ள இருமை[1] என்ற எண்ணேயாகும்.

(ix) திராவிட மொழிகளில் செயப்பாட்டு வினைக்குத் தனி வடிவம் கிடையாது. படு என்னும் துணைவினை சேர்க்கப்பட்டே அப் பொருளில் வழங்கப்பெறுகிறது.


  1. ஒருமை பன்மை என்பதின்றி ஒருமை, இருமை, பன்மை என்று எண் மூன்று வழங்கும்