பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

பாகச் செந்தமிழே, மிகவும் பயன் தருவதென்பதை ஒப்புக் கொள்ளல் வேண்டும். இதற்குக் காரணம் திராவிட மொழிகள் அனைத்தினுள்ளும் முன்னதாகத் திருத்தமுற்ற மொழி தமிழ் என்பதேயாம்.

(1) திராவிட மொழிகளின் இலக்கிய நடைமொழி எவ்வளவுக்கு அவ்வம் மொழிகளின் பண்டைய உருவங்கள் எனத் தகும் ?

ஒரு மொழி இலக்கிய மொழியாகப் பயிலத் தொடங்கியதும், அஃது அம்மொழியின் பேச்சு நடைமொழியுடன் தொடர்பற்றுப் பிறிதொரு மொழியாய் விடுதல் இந்திய மொழிகளிடைக் காணப்படும் புதுமைகளுள் ஒன்றாகும். இப்பண்பு வடக்கிலுள்ள ஆரிய மொழிகள், தெற்கிலுள்ள திராவிட மொழிகள் ஆகிய இரண்டிலுமே காணப்படுகின்றன. இவ்வகையில் வடமொழிக்கும், பாகதங்களுக்கும், தற்கால வடஇந்திய மொழிகளுக்கும் உள்ள தொடர்பு, இலத்தீன் போன்ற உயிரற்ற ஐரோப்பிய மொழிகளுக்கும் ஐரோப்பாவின் இன்றைய உயிருள்ள மொழிகளுக்கும் உள்ள தொடர்பைப் போன்றதன்று. ஐரோப்பாவில் " உயிரற்ற " மொழிகள் என்று சொல்லப்படுபவை ஒரு காலை உயிருள்ள மொழிகளாகவே இருந்தன ; அஃதாவது, கிட்டத்தட்ட எழுதுவது போன்றே பேசப்பட்டு வந்தன. ஸிஸரோவும் 1, டெமாஸ்தனீஸும் 2 இதற்குச் சான்று பகர்வர். அவற்றை " உயிரற் மொழிகள்" என்று சொல்லும்போது அவை உயிருள்ள நிகழ் காலத்து மொழிகள் அல்ல, உயிரற்ற இறந்த காலத்து மொழி கள் என்பதே குறிப்பு. வடமொழியை " உயிரற்ற " மொழி என்பது இதே பொருளிலன்று. பெரும்பாலும் அஃது என்றும் உயிரற்ற மொழியாக இருந்ததென்றே


1. Cicero, 2. Demosthenes.