பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மூலமொழியின்......... மொழி எது ?

139

மான பழங் திராவிட வடிவங்களை ஆராயும் வகையிற் பேருதவி தருவது அதுவே என்பதும் பெறப்படும். ஆனால் நாம் மேலே குறிப்பிட்டபடி தமிழோ மற்ற எந்தத் தனிப்பட்ட மொழியோ (அது பழைமையுடையதாயினும் சரி, அன்றாயினும் சரி) பண்டைத் திராவிட மொழியின் வகைக்குறி மொழியாகக் கொள்ளுதற் குறியதாகாது. இம்மொழிகளின் சிறப்பான பண்புகள் அனைத்தையும் நன்கு ஒர்ந்து ஒப்பிட்டுப் பார்த்து அவற்றின் ஒற்றுமைகளைப் பிரித்தறிவதால் இம்மொழிகளின் இலக்கணங்கள் வகுக்கப்பட்ட காலங்களுக்கெல்லாம் முந்தி, இம்மொழிகள் வேறு வேறாகப் பிரிவதற்குங்கூட முந்தி, இவை இருந்த நிலைமையும் அமைப்பும் நன்கு விளங்கும். அவற்றை ஆராய்ந்து காணும் ஒப்புமையே. பெரிதும் மொழியியலார்க்குத் துணை புரிவதாம்.