பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

தமிழ் ஒலிப்பையே காட்டுகிறது (தமிழ் நாட்டினர் சோழன் என்ற சொல்லை ஸோழன் என்றே ஒலிப்பர்). இடையில் வரும் மெய்யாகிய ரகரம் கமிழின் சிறப்புழகரத்தினிடமாக மேல்நாட்டு மக்களால் இன்னும் வழங்கப்படுகிறது. இவ் ஒலி தெலுங்கு, வடமொழி முதலியவற்றில் இல்லை. எனவே, தெலுங்கர் இதனை டகாமாகவும் ளகரமாகவும் (சோட-சோள என்றும்), வடமொழியாளர் டகரமாகவும் (சோட), பாலிமொழியார் ளகரமாகவும். (சோள என்றும்) எழுதினர். கிரேக்கர் இதனை ட, ள, ல என்றெழுதாமல் ர என்றெழுதியதிலிருந்து சிறப்பு ழகர ஒலிப்பும், அதனை உடைய தமிழும் மிகப் பழைமையுடையன என்று விளங்குகின்றமை காண்க. சோழனது தலைநகராகக் கிரேக்க மொழியில் கூறப்படும் ஒர்தர[1] உறையூர் ஆகவேண்டும்.

(4) கிரேக்கமொழியில் ஆர்காதோஸ்[2] என்ற இந்தியச் சிற்றரசன் பெயர் கூறப்பட்டுள்ளது. கிரேக்கர் அடிக்கடி நாட்டின் பெயரையும் மன்னன் பெயரையும் மயங்கக் கூறுவதுண்டு. அதன்படி ஆர்க்காடு என்ற ஊரின் பெயர் மன்னன் பெயராக மாறி யிருக்கக் கூடாதோ என்று ஐயுற இடமுண்டு. இதன் பெயர் கி.பி. 1340-ஆம் ஆண்டில் இபின்பதுாதா என்ற அராபிய எழுத்தாளரால் குறிப்பிடப்படுகிறது. ஆறு முனிவர் வாழ்ந்த காடு ஆதலால் இஃது ஆறு காடு என்று கூறப்பட்டது என்று அவ்விடத்துள்ளோர் கூறுகின்றனர்.[3] தமிழில் ஆறுகாடு என்பது பிற சொற்களுடன் சேர்ந்து தொடர் சொல்லாகும் போது ஆறுகாட்டு என்றாகும். கிரேக்கரது தகரம் இந்த டகாத்தின் ஒலிப் பெயரைக் குறிப்பிடுவதாய் இருக்க வேண்டும். இங்ஙனமாயின் பகுதியிலுள்ள உகர முதலிய மெய்கள் இரட்டுவதும், வல் எழுத்துக்கள் சொல்


1. Orthoura. 2. Arkatos- 3. ஆர்க்காடு என்பதே சரியான தமிழ்ப்

பெயர்.

AM


  1. 1
  2. 2
  3. 3