பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கா. திராவிடர் ஆரியநாகரிகமேற்ற காலம்



திராவிட நாகரிகத் தொடக்கம் பாண்டிநாட்டுத் தமிழ். மக்களிடையேதான் என்றும், பண்டைத் தமிழர்கள் வகுத்தமைத்த முதற்பட்டினம் காமிரபர்ணி எனப்படும் பொருநையாற்றின் கரையிலிருந்த கொல்கையே யென்றும் திராவிடப் பழங் கதைகள் எல்லாம் ஒருபடித்தாகக் கூறுகின்றன. இந் நாகரிகம் தொடக்கத்தில் தற்சார்புடையதாகவே இருந்திருத்தல் வேண்டும் ; எனினும், அதன் விரைந்த வளர்ச்சி வட நாட்டிலிருந்து வந்து ஆங்காங்குச் சிறு குடியினராகத் தங்கிய ஆரியர்களின் துணைகொண்டு ஏற்பட்டிருத்தல் கூடும். இவ்வாறு வடக்கிருந்து தெற்கே போந்து குடியேறியவர் களுட் பெரும்பாலோர் பார்ப்பனர்கள். அவர்கள் காவேரியும், பொருநையும் பாயும் நிலப்பகுதிகளின் செழுமையையும் கொழுமையையும் கேள்வியுற்று நாடி வந்திருக்கலாம். இன்றேல், பழங்கதைகளின்படி, இராமனின் வீரச்செயல்களின் பெருமையைக் கேட்டும், இராமேச்சுரத்தில் இராமனே பூசை செய்த சிவலிங்கத்தின் மகிமையைக் கேட்டும் வந்தவர்களாதல் வேண்டும். முதற்கண் வந்து குடியேறிய பார்ப்பனர்களுக்குத் தலைவர் அகஸ்தியர். வேதப் பாசுரங்கள் பலவற்றை இயற்றியவர் என்றும், வேள்விகள் பல இயற்றிய தூய மாமுனிவர் என்றும், தெற்கே எட்டிய தொலை செல்பவர் என்றும் வடஇந்தியாவில் இவர் பெயர் பெற்றவர்; தென்னிந்தியாவிலோ கலைகளும், இலக்கியமும் கிராவிட மக்களுக்கு வகுத்தளித்த தமிழ்முனி என்று இவர் கொண்டாடப் பெற்றவர். (அகஸ்தியர் என்று ஒருவர் இருந்தாரென்பது உண்மையானால்) அவர் ஆரிய வங்தேறிகளின் தலைவர் என்று கூறுவதைவிட, அல்குடியேற்றக் கட்டுக் கதைக்குத் தலைவ