பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிடர் ஆரியநாகரிகமேற்ற காலம்

175

இத்தகைய கப்பல் வாணிப முறையினாலேயே, செங்கடல் வணிகரிடமிருந்து திராவிடர்கள் எழுத்து முறை கற்க, அவர்களிடமிருந்து பின்னர் ஆரியர் கற்றனர் என்று டாக்டர் பர்னெலும், வடஇந்தியாவிலுள்ள லாட்[1] என்னும் மொழியின் எழுத்துக்கள் திராவிட எழுத்துக்களை யொட்டி எழுந்தவையே என்று எட்வர்ட் தாமஸ்[2] என்பவரும் கூறுகிறார்கள். இவை ஆராய்ச்சிக்குரியன. மன்னன் சாலமன் காலத்தில் ஆரியர்கள் தொலை நாடுகளுடன் கப்பல் வாணிபம் செய்து வந்ததாக வேதங்கள் கூறுகின்றன; ஆனால் எத்துறைமுகங்களிலிருந்து கப்பலேறிச் சென்றனர் என்பது ஆராய்ச்சிக் குரியதாம்.



முற்றிற்று


  1. Lat
  2. Mr. Edward Thomas