பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

கிரீயர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புக்கள்



தியிலுள்ளோர் கீழைப்பகுதிக்கும் சென்று குடியேறியமை வரலாற்றுண்மையாகும். இவ்வாறு இடம் பெயர்ந்து சென்றோர் வணிகர்களாகவோ, விறல் மன்னர்களாகவோ, நிலக்கிழவர்களாகவோ, இன்றேல், பூசாரிகளாகவோ குடிபுகுந்துறைந்து தம் குழுஉச் சிறப்புகளில் தலையாயவற்றை வழுவ விடாமற் காத்துப் பெருமையாகவும், இயன்றவரையில் தனியாகவுமே வாழ்ந்துவர முயன்றுவந்துளர். எனினும், ஆங்காங்கு ஒருசிலர் தம் குழுஉச்சிறப்பியல்புகளை அறவேயொழித்து, குடியேறிய நாட்டினரோடு பல்லாற்றானும் ஒற்றுமைப்பட்டு வாழ்ந்துவந்திருத்தலுங் கூடும். ஆகவே, மேற்கண்ட பிரிவுவகை ஆராய்ச்சிக்கருவியாகக் கொண்ட பொதுப்படையான அளவு கோலேயாகும்.