பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

கிரீயர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புக்கள்



கேள்[1] என்று பெயர். ஒவ்வொரு கேளைச்சேர்ந்த மக்களெல்லோரும் ஒன்றுபட ஒரே ஊரில் வாழ்ந்து வருவார்கள். ஆனால், அவர்களுடைய சிறப்பியல்பொன்றென்ன வென்றால், தஞ்சிற்றூரைச் சேர்ந்த தங்கள் குலத்தவர்களே நட்பினர் என்றும், ஏனை ஊர்களைச் சேர்ந்த பிறகுலத்தினர்கள் எல்லோருமே தங்கள் பகைவர்கள் என்றுங் கருதுவதேயாம். ஆகவே, தங்கள் சிற்றாரைச் சுற்றி அகழ்போன்ற பள்ளம் ஒன்றைத் தோண்டிக் கொள்வார்கள் ; அப்பள்ளம் நிறைய கூர்மை பொருங்கிய மூங்கிற் கப்பணங்களை[2] அடித்து வைப்பார்கள் ; அப்பள்ளத்தைத் தாண்டித் தாங்கள் உள்ளே செல்லுவதற்கும், வெளியே வருவதற்கும் பயன்படுமாறு நூலேணிபோன்ற ஒன்றை வைத்திருப்பார்கள். மகளிரைச் சிறையெடுப்பது கருதி இக்கேளினருக்குள் ஒருவருக்கொருவரிடையே அடிக்கடி படையெடுப்பும், பூசலும் நிகழ்வதுண்டு.

இனி, துருக்க-ஐரானியர்களென்ற இனத்தாரிடையே இரண்டு தனிப்பட்ட பிரிவுகள் உள. உறவின் முறையை அடிப்படையாகக் கொண்டு ஒன்று சேர்ந்த தொகுதி முதற் பிரிவாகும். ஆஃப்கானிஸ்தானத்திலுள்ள[3] பதான்ஸ்[4] என்ற பட்டாணிகள் இம்முறைபற்றி ஒரினமாகப் பிரிக்கப்பட்டவர்களே; பஷ்டு[5] என்ற மொழியை அவர்கள் பேசுவதாலேயே “பதான்ஸ்” என்றழைக்கப்பட்டனர் போலும். மற்ருெரு பிரிவோ, உறவின் முறையினர் என்ற கட்டுப்பாடின்றி, வழிவழி நட்புப்

[6] பூண்டவர்கள் என்ற முறைபற்றி ஒன்று சேர்ந்த பல குலத்தினரைக் கொண்டதாகும். வேளாக்மாறி [7]. என்ற ஒரு பகுப்பினரை இதற்குக் காட்டாக எடுத்துக் கூறலாம். பிராகுவியர், பஞ்சாப் பகுதியைச் சேர்ந்த


  1. 1. Khel
  2. 2. Calthrop
  3. 3. Afghanistan
  4. 4. Pathans.
  5. 5. Pashtu
  6. 6. Blood-feud.
  7. 7. The Marri of Baloch