பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 து ஆனால், இந்திய விடுதலைப் புரட்சியை விரைவு படுத்தியது, I 942 ஆகஸ்டு மாதம் 8ம் நாள் பம்பாயில் மெளலான அபுல்கலாம் ஆஜாத் தலை மையில் கூடிய இந்திய தேசியக் காங்கிரஸ் இயற்றிய வெள்ளையனே வெளியேறு' என்ற தீர்மானம் ஆகும். இதனால் பீதியடைந்த பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் தேசியத் த ைல வ ர்கள் அனைவரையும் சிறைப்படுத்தி வைத்து அவர்களது இயக்கங்களை பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு பயங்கரமாக நசுக்கியது. இந்த அடக்குமுறைக்குப் பணியாது ஆயிரக்கணக்கான மக்கள் ஆட்சியாளருக்கு எதிராக கிளர்ந்து எழுந்தனர். அவர்கள் அனைவருக்கும் வருடக்கணக்கில் கடுங்காவல் தண்டனை வழங்கப் பட்டு நாடெங்கும் உள்ள சிறைகளில் நிறைத்து இட்டப்பட்டனர். இந்த கால கட்டத்தில் இந்த மாவட்டத்திலும் நாட்டு விடுதலையில் நாட்டமுள்ள நல்லவர்கள் நூற்றுக் கணக்கில் அடக்கு முறையை எதிர்த்துக் கைது ஆகி தண்டனை பெற்றனர். குறிப்பாக தேவ கோட்டை கோட்டத்தில் உள்ளவர்கள் கொடுமை யைக் கண்டு குமைந்தவர்களாக, கொடுங்கோலை அதனுடைய அனைத்து வடிவங்களிலும் எதிர்த்தனர். நிராயுதபாணிகளான அவர்களது, நிமிர்ந்த நெஞ் சங்களை ஏகாதிபத்தியத்தின் குண்டுகள் துளைத்துச் சென்றன. கொடுரமான கசையடிகள், தாய்மார் களுக்கு தலைகுனிவு, சொத்துக்கள் பறிமுதல், கிராமங்களுக்கு கூட்டு அபராதம் என பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானார்கள். பூலாங்கு றி ச் சி , தேவகோட்டை, திருவாடானை மக்களின் கொதிப்பு அடங்கவில்லை. அரசு அலுவலகங்கள், கருவூலம், காவல்நிலையம், நீதிமன்றம் ஆகிய அனைத்தையும்