பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮨ 2 6 இந்தியா திரும்பியவுடன் மீண்டும் மறவர் சீமைக்கு வந்தார். அரசியல் விளைவுகளைச் சிறிதும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தமது பணியைத் தீவிரமாகத் தொடர்ந்தார். புளியால் கிராமத்திற்குப் பக்கத்தில் உள்ள முன்னி என்ற சிற்றுாரில் அவரும் அவரது தொண்டர்களும் தங்கி இருந்த பொழுது கைது செய்யப்பட்டு, இராமநாதபுரம் மன்னரிடம் இழுத்துர் செல்லப்பட்டனர். பாதி ரியாரிடம் இப்பொழுது அரச ருக்குப் பரிவு ஏற்படவில்லை. காரணம், கிறித் துச் சமயத்தைத் தழுவிய மன்னரது நெருங்கிய உறவினவ கள் அவரது ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஏற்கனவே ஈடுபட்டிருந்தனர். - ஆதலால், பாதிரியாரை சில நாட்கள் இராமநாத புரம் சிறையில் இருத்தி வைத்தபின்னர், ஒரியூர் கோட்டைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர் 4-2-1698ல் கொல்லப்பட்டார். அவரது உயிர்த் தியாகம் அந்தப்பகுதி மக்களிடம் குறிப்பாக, இந்து சமயப் பிரிவினர்களான உடையார்கள், கடையர்கள் ஆதிதிராவிடர் ஆகிய பிரிவினரிடையே அனுதாபத்தை வளர்த்ததுடன் பிற்காலங்களில் அவர்கள் பெருமள வில் இந்த சமயத்தை ஏற்றுக் கொள்வதற்கு காரண மாக இருந்தது. மறவர் சீமையின் வடபகுதியிலும் கீழ்பகுதியிலும் இந்தப் புதிய கிறிஸ்துவர்களுக்கான வழிபாட்டுத் தலங்கள் எழுந்தன. ஒரியூர், காரங்காடு சருகணி, கிளாஞ்சுனை, புளியால், திருவரங்கம், கமுதி, இடைக்காட்டுர், சூர்ாணம், கொக் கூரணி ஆகிய ஊர்களில் சமயப் ப னி யு ட ன் கல்விப்பணியும் துவக்கப்பட்டது. இராமநாதபுரத்தில், கி.பி. புகுதல். புத்து மாணவர்களுடன் சுவாட்ஸ் புதிரியார் ஆங்கிலப்பள்ளியொன்றைத் துவக்கியது இங்கு குறிப் பிடத்தக்கது. மக்களது ஆதரவைப் பெற்ற அவர் o