பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 ஆட்சிமுறையும் அரசியல் மொழியாக தெலுங்கும் கைக் கொள்ளப்படுகிறது. சேதுபதி மன்னர்கள் ஆணைகளை தெலுங்கில் கையெழுத்து இட்டு வெளியிட் டனர். கி.பி. 1760 வரையான காலப்பகுதியில், திருமலை சேதுபதி, விஜயரகுநாத சேதுபதி, குமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி ஆகிய மன்னர்கள் தெலுங்கில் கையெழுத்திட்டுள்ள செப்பேடுகள் உள்ளன. இந்த மன்னர்களது ஆட்சிக்காலத்தில், கணிசமான அளவில் வடுகர்கள் நிர்வாகத்தில் நியமனம் பெற்றனர். இதே மக்களது குடியமைப்புகள், சமுத்திரம், பட்டி என வழங்கப்பட்டன. கவரயர். பலிஜா என்ற பிரிவுக்ளுடைய இந்தமக்கள் பூரீவில்லிபுத்துார், சாத்தூர் வட்டங்களில் மிகுதியாக உள்ளனர். பலிஜா பிரிவினர், தங்கள் பெயருடன் நாயுடு என்ற விகுதியையும், கவரயர்களும், கம்ப ளத்தார்களும் நாயக்கர் என்ற விகுதியையும் சேர்த்து வழங்குகின்றனர். இவர்கள் பெரும்பாலும் விவசா யத்தில் ஈடுபட்டுள்ளனர். வஉடல் அமைப்பிலும், பழக்க வழக்கங்களிலும் இவர்கள் வேறுபட்டவர் களான ரெட்டிகள், அருப்புக்கோட்டை திருச்சுழியல் வட்டங்களில் உள்ள புஞ்சை நிலங்களைப் பயன்படுத்தி பருப்பு, நெல், கம்பு, வரகு சோளம் போன்ற பயிர் களைச் சாகுபடி செய்கின்றனர். ராஜூக்கள் என்ற ராஜாக்களும் ஆந்திரத்திலிருந்து வந்தவர்கள் தான். மதுரை நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இந்த மாவட்டத்தில் கீழராஜகுலராமன் என்ற ஊரில் குடியே றிய இந்தப் பிரிவினர், பின்னர் ராஜபாளையத்திலும் நிரந்தரமாக நிலைத்து விட்டனர். இவர்களது மணவினை போன்ற சமூக உறவுகளை ராஜ பாளையம் வட்டத்திற்குள் உள்ள தங்கள் இனத் o,