பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮮ 8 KᎨ இவர்கள், திருவாடானை, தேவகோட்டை ,சிவகங்கை, இளேயான்குடி, பரமக்குடி, மானமதுரை வட்டங் களில் ஆங்காங்கு வாழ்ந்து வருகின்றனர். இந்த மாவட்டத்தின் ஏனைய சிறுபான்மை இனத்த வரைப் போன்று, இந்த மக்களும், இந்த மாவட்டத் திற்கு வெளியே இருந்து ங்கு குடிவந்தவர்கள் என்பது வெளிப்படை காரணம் இந்தப்பிரிவினர். இந்த மாவட்டத்தைவிட தர்மபுரி, திருச்சிராப்பள்ளி, சேலம், தென் குற்காடு மாவட்டங்களில் எண்ணிக் கையில் அதிகமாக இருந்து வருவதுதான், ஆல்ை இவர்களது குடியேற்றத்தைப் பற்றி அறுதியிட்டுக் கூற வல்ல ஆவணம் எதுவும் இல்லை. இவர்கள், தங்களை 'வேளிர் வழியினராகச் சொல் லிக் கொள்வதுடன், சங்ககால வள்ளலான பாரிவே ளும், திருக்கோவிலு ர் மலேயமான் திருமுடிக்காரியும் தங்கள் மரபினர் எனப் பெருமிதம் கொள்கின்றனர். இந்த மாவட்டத்தில் உள்ள பிற சிறுபான்மை மக்களேவிட உழைப்பில், இந்த சமூகத்தினர் சிறந்து விளங்குகின்றனர். இவர்கள் வாழும் பகுதி எப்பொழு தும் விவசாயத்தில் வளர்ந்து பொலிகிறது. எந்த மண்ணையும் பொன்னக்கும் திறமை உடையவர் களாக இருப்பதால்தான் என்னவோ, இவர்கள் 'உடையார்' என்றே அழைக்கப்பட்டு வருகின் றனா. - - பதினேழாம், பதினெட்டாம் நூற்ருண்டில் இங்கு சமயப் பணியில் ஈடுபட்ட புனித ஜான்-டி-பிரிட்டோ புனித மார்ட்டின் ஆகிய வெளிநாட்டு சமயத் தொண்டர்களது, தியர்கம், தொண்டு, பிரச்சாரம் ஆகியவைகளினல் கவரப்பட்ட இந்த சமூகத்தினரின் ஒரு பிரிவினர் கிறிஸ்துவர்களாக் வாழ்ந்து வருகின் றனர். மத மாற்றத்தினல் தங்கள பெயர்களை இவர்கள் மாற்றிக் கொண்டாலும், பெயர்விகுதியில் 'உடை யார்' என்ற சொல் மாற்றம் பெருமல் ஒட்டிக் கொண்டு உள்ளது. அந்நியர் ஆட்சிக் காலமுதல், இவர்கள் சமூகநிலையில் பின்னடைந்தவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்த சமூகத்தினர், அரசிய்லில் விழிப்புக்கெர்ள்ளாத