பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 27 களது பணி கடந்த இருநூறு ஆண்டுகளாகச் சமயத் துடன் நில்லாமல், கல்வி, மருத்துவம், சமூகநலம் என்ற துறைகளைத் தொட்டுத் தொடர்ந்து வருகின் றன. இவைகளில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித் துள்ள ஆயிரம் ஆயிரம் கிறித்துவ சமயக் சான்ருேர் களேயும், ஏசு சபையினரையும் அவர்களுக்குப் பின்ன னியாக உள்ள ஸ்விடிஸ், ஜெர்மன், டச்சு சமயக் குழுக்களேயும் வரலாறு மறந்து விடாது, வடுகர் F

  • இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களும் வேறு நாடுகளி லிருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்ததைப் போன்று, வேற்று மாநிலங்களில் இருந்தும் இந்த மாவட்டத்தில் குடியேறியவர்களும் உண்டு. அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்:- நாயக்கர், இராசுக்கள், ரெட்டியார், கம்பளத்தார் என்ற பிரிவுகளில் அடங்கும் வடுகர் ஆவர். இவர்கள் அனைவருக்கும் தாய்மொழி தெலுங்கு பின்பற்றும் சமயம் வைணவம். இந்து சமயத்தின் பிற நெறிகளே பேணுவதற்கும் இவர்கள் தயங்கு வதில்லை. இவர்களில் கம்பளத்தார் என்னும் தொட்டிய நாயக்கர்கள் மட்டும் தங்களது மூதாதையர்களையும், தங்களது முன்னோர்களில் கன்னிகையாக இருந்து உயிர் நீத்தவர்களேயும் குலதெய்வமாக வழிபடும் பழக்கம் உடையவர்களாக இருந்து வருகின்றனர். இன்னும் சிறப்பான செய்தி, இந்தப் பிரிவைச் சேர்ந்த ஆண், பெண் இருபாலரும் மாந்திரிக ஆற்றல்களில் சிறந்த பயிற்சி உடையவர்களாக விளங்கிர்ைகள்.