பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளர் பல நூற்ருண்டுகளுக்கு முன்னர், செங்கை மாவட்டத் தின் காஞ்சி நகருக்கருகில் உள்ள வல்ல நாட்டின் பூர்வ குடிகளான கள்ளர் தங்கள் வேட்டை நாய்களுடன் தெற்கு நோக்கி வந்தனர். மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களின் வடபகுதிகளிலும் திருச்சி மாவட்டத் தின் கிழக்குப் பகுதிகளிலும் நிலைத்து வாழத்தொடங் கினர். தாங்கள் வாழ்ந்த பகுதிகளை நாடுகள் என வழங்கினர். உஞ் சனே நாடு, பாலையூர்நாடு, அம்புநாடு, குலமங்கல நாடு, பாப்பாநாடு, வடமலைநாடு, தேன்மலை நாடு, சிறுவயல்ந. டு என்பன அவை. இவர்களில் அம்புநாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் தங்களே மற்ற பிரிவினர்களை விடச் சிறந்தவர்களாகக் கருதினர். கடவுள் வழிபாடு, சமூகபழக்க வழக்கங்கள் ஆகியவைகளில் வைதீக இந்து மரபுகளைப் பின்பற் றினர். இவர்களது பெண்களும் மூடு பல்லக்கில் செல் லுதல், நிலைமுக்க டு, மேலாடை, ரவிக்கை ஆகியவை களை அணிதல், கருகமணி, பச்சை, கருவளையல், காப்பு, காரை, கம்மல் ஆகிய அணிகலன்களை பயன் படுத்தல் ஆகிய பழக்கங்களைப் பின்பற்றினர். பாலை நிலப்பண்புகள ன கொடுந்தொழில்களை வாழ்க் கையாகக் கெ ண்ட இந்த ஆறலைக் கள்ளர் தன்ன ரசு நாட்டங்கொண் டவர்களாக, மதுரை மண்டல நாயக்க அரசுக்கு கட்டுப்படாமல் இருந்ததனால் அரசின ருக்கும் அவர்களுக்கும் பல மோதல்கள் ஏற்பட்டன. அவ்வப்பொழுது நிலவிய நெருக்கடிகளைப் பயன்படுத்திக் கொண்டு அரசினரை அச்சுறுத்தி அப்பாவி மக்களைத் துன்புறுத்தி வந்தனர்.