பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4, 6 தினருக்கும் திருக்கோயிலுக்கு வரும் பொழுது சங்கு ஊதி பறைமுழக்கிக் கொள்ளும் உரிமை வழங்கியது. էՔ து. -ஏ. ஆர். 33-1924 8 வடமாநிலத்தினின்றும் வந்த அந்தண விதவை ஒருத்தியிடம் தகாத முறையில் திருப்புத்துார் ஆலய மேலாளர் நடந்து கொண்டது பற்றி விசாரித்த கோயில் அறங்காவலர் குழு மதுரை யில் உள்ள மன்னனது தீர்ப்பை நாடினர். (கி.பி. 1291) - _ _ _ _ _-«r. <gff. @. 1909 Part ii (28) 9. பிரான்மலை கோயிலில் அரிசி, பருப்பு முதலிய - - வுைகளை அளப்பதற்கு 'திருநாவுக்கரசு நாழி' என்ற பெரும்படி பயன்படுத்தப் பட்டது. (கி.பி. 1273) - -ஏ. ஆர். 152-1903 10 கிழக்கு இராமநாதபுரம் பகுதியில் தொகுதியாக அமைந்த இருபத்து நான்கு ஊர்களில் உள்ள மேல் ஜாதிக்காரர்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவிவந்த ஒற்றுமைக் குறைவு ஒரு கட்டத்தில் பல உயிர்கள் பலியாவதற்கு காரணமாகி விட்டது. இந்நிலையில் காங்கையராயன் என்ற அரசு அலுவலர் தலையிட்டு அந்த சாதிப்பூசலைத் தீர்த்து வைத்தார், அவரது அறிவுரைப்படி பறையர்கள் மற்ற சாதிக்காரர்களது நன்மை தீமையான காரியங்களின் பொழுது பறை முழக்க வேண்டும். அதற்கு கூலியாக பறையர்கள்