பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 வணிகரில் இஸ்லாமிய அஞ்சு வண்ணத்தவரும் இருந்ததாகத் தெரிகிறது. இங்ங்னம், இஸ்லாமியர் - அரபு நாடுகளில் இருந்து வணிகத்திற்காக கிழக்கு கரைக்கு வந்தவர்கள் இந்த ஊரில் வலசையாக வாழ்ந்தனர். பதின்மூன்ரும் நூற்ருண்டில் பாண்டிய நாட்டவரும் அரபு நாடு களுக்கும் இடையே விறுவிறுப்பாக நடந்த குதிரை வாணிபத்தில் இந்தப் பட்டினத்திற்கும் பங்கு இருந் திருக்க வேண்டும். இன்னும் இந்தப் பகுதியில் தொண்டி மட்டக் குதிரை போல' என்ற வழக்கு இருப்பது பழமையை நினைவு கூர்வதாக உள்ளது. பதின்ைகாவது நூற்ருண்டில் வாழ்ந்த அரபுநாட்டுப் பயணி இந்த ஊரை திண்டா (Dynda) எனக் குறித்துள்ளார். கி.பி. 1639 முதல் இந்தப் பகுதியில் போர்த்துக் கீசியரின் நடமாட்டமும் கிறிஸ்துவமத பிரச்சாரமும் நீடிப்பதற்கு திருமலை மன்னர் காரணமாக இருந்தார். அப்பொழுது யாழ்ப்பாணத்தை (இலங்கை) தங்களது ஆட்சியில் வைத்திருந்த போர்த்துக்கீசியர் எதிர்க் கரையில் உள்ள தொண்டியுடன் மது, மிளகு, பட்டு ஆகியவைகளில் வியாபாரத் தொடர்பு கொண்டிருந் தனர். என்ருலும் சேதுபதிகளது கடுமையான நட வடிக்கை காரணமாக போர்த்துக்கேசியர் இங்கு நீடிக்க முடியவில்லை. தொண்டியந்துறைக் காவலன் என்ற விருதுகள் உரி யவர்களாக சேதுபதிகளது இந்தஊர் கி.பி. 1730இல் புதிதாக அமைக்கப்பட்டசிவகங்கை சீர்மையுடன்சேர்க் கப்பட்டது. ஆங்கிலேயருக்கும் சிவகங்கை பிரதானி களான மருது சசோதரர்களுக்கும் இடையில் நிகழ்ந்த பல போர்சளில் இந்த ஊரும் சம்பந்தப்