பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வலியறிதல்

121


தோன்றினாலும் பெரும்பாலோராய் உலகத்தவர் கண்டு இகழாத வகையில், செயல்களை ஆய்ந்து பார்த்துச் செய்தல் வேண்டும்.

எள்ளாத-இகழாத; கொள்ளாத-தம் கருத்துக்கு ஒத்து வாராத. 470

48. வலியறிதல்


1.வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

தான் செய்ய எண்ணும் ஒரு செயலை, அச்செயலின் வலிமையையும், தன் வலிமையையும், எதிரியின் வலிமையையும் ஆராய்ந்து பார்த்துச் செய்தல் வேண்டும்.

வினை-தொழில், செயல்; மாற்றான்-பகைவன், எதிரி; தூக்கி- ஆராய்ந்து பார்த்து. 471

2.ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

தம்மால் இயல்வதை அறிந்தும், மேலும் அறிய வேண்டியதைப் பிறர் மூலம் கேட்டு அறிந்தும், தாம் மேற்கொண்ட செயலிலேயே மனத்தைப் பொருந்த வைத்து, முயற்சி செய்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.

ஒல்வது-இயல்வது; ஒல்வது அறிதல்-தமக்குள்ள வலிமையைத் தெரிந்து கொள்ளுதல்; அறிவது அறிதல்-மேலும் அறிய வேண்டியதை ஒற்றர் மூலம் கேட்டறிதல்; அதன் கண் தங்குதல்- அந்தச் செயலின் மேல் கண்ணும் கருத்துமாக இருத்தல்; செல்வார்-முயற்சி செய்யத் தொடங்குபவர்; செல்லாதது- முடியாதது. 472

3.உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

தம்முடைய வலிமையின் அளவை அறிந்து கொள்ளாமல், தமக்குள்ள ஊக்கத்தின் மிகுதியால் ஒரு செயலைச்

தி.—9