பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

இலங்கையிலிருந்து வந்த கதிரேசரைத் 'தமிழெனும் தாயைக் காக்க வந்திவண் தங்கிவிட்டான்' (2:16) என்பார். பண்டிமணியாருடன் பழகிய முன்னேடியாம் அரசன் சண்முகஞரும் 'அடித்துரை யாற்ற வல்லர்’ (12:18). பண்டிதமணி வடமொழி கற்றாரேனும் தம்மொழி மறந்தாரல்லர்: தமிழராய் வாழ்ந்து நின்ருர் (2:34). வருமொழி கற்றுத் தாய்மொழி பழிக்கும் நாய்மனங் கொள்வாரைக் கவிஞர் கடிகின்றார். "பெற்றதாய் மொழியிற் பற்றும் பிறமொழி தனில் மதிப்பும் உற்றிடல் வேண்டும்.” (2:37) என்பதே மணியார் உணர்த்திய உண்மை நெறியுணர்காதை யில், சமயநெறியில் பூண்டு நின்றவர்களே இவர் விளக்கிக் காட்டுகின்ருர்,

          "முற்றுறக் கல்லார் தாமும்
             முயல்கிருர் பாடல் யாக்க
          வெற்றரைத் தட்டிக் கேட்க
             வீறுகொள் புலவரில்லை’ (7:5)

எனக் கவிஞர் நெறிபிறழாத பாடல் நெய்திடும் திறமையில்லாரைக் கடிகின்றார்.

இன்றைய சொற்பொழிவாளர் குறைகளையும் சுட்டுகிருர் கவிஞர்.

          'இலக்கியங்கள் பயிலாமல் இலக்கணத்தின்
          இயல்பொன்றும் அறியாமல் நுனிப்புல் மேய்ந்து
          சொலக்கருதும் ஒருபொருளைச் சிந்தித் தாய்ந்து
          சொலுமுறையாற் சொல்லாமல், முழக்கமிட்டுக்
          கலக்கிவரும் பேச்சாளர்' (8:1)

பெருகிவருவதை வருத்தத்துடன் புகல்கின்ற கவிஞர், ஒரு நல்ல பொழிஞனின் திறன்களையும் நன்கு வகுத்துரைக்கிறார். இலக்கணத்தை வெறுக்கின்ற இக் காலத்தைக் கடிந்து, நிகழ்காலம் இகழ்காலம் ஆயிற்றந்தோ (10:9) என இரங்குகின்றார். பாட்டரங்கில் பிறமொழிப் பாடல் களையே இசைப்பவர்க்கு இவர் தக்கவாறு இடித்துரை கூறித் *தமிழை மீண்டும் பூக்கவிடா தொழிப்பதுதான் அவர்தம் நோக்கம் என அவருள்ளத்தையும் புலப்படுத்துகிறார்.