பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அ௪

ஊன்றுகோல்



தெங்கின்காய் உடைக்குமொலி கேட்டு விட்டால்
திரண்டோடி வந்தன்னை சிலை பற்றி
இங்கந்நீர் எனக்கெனக்கென் றடம்பி டிக்கும்
இளஞ்சிறுவ கிடைநிற்பாள் ஒவ்வோர் வாய்க்கும்
பங்காக்கி ஊற்றுதல்போல் தம்பால் வந்து
பணிபவர்க்குத் திருநீறு வழங்கி வாழ்த்திச்
சங்கத்து முத்தமிழ்க்கும் 'சங்க ரற்கும்
சமமாக உளமளித்த அடிகள் நின்றர். {[float_right|4}}

மேன்மாடத் திணிதிருந்த அடிகள் தம்பால்
விறுபெறு தமிழ்ப்புலவர் வருகை கூற
மான்தாவித் துள்ளுதல்போல் உவகை கூர்ந்து
மாமுனிவர் எழுந்தோடி இறங்கி வந்தார்;
"கான்மாறி யிருப்பதனாற் படிகள் ஏறிக்
கண்டுவர இயலவில்லை; அடிகள் தம்மை
நான்பாவி வரவழைத்தேன்; பொறுத்துக் கொள்க"
நாடுகளிெப்ப மனம்தி றந்தார். 5

செந்தமிழ்மா மணிமொழிந்த பணிவு கண்டு
சிவசிவவென் றடிகளவர் தொழுதி ருந்தார்;
உந்திஎழும் ஆர்வத்தாற் பொங்கி நின்ற

உணர்ச்சியினால் ஒருவர்முகம் ஒருவர் கண்டு
கொந்தவிழ்ந்து விரிமலர்போல் முறுவ லித்தார்.
கொழிதமிழும் சிவநெறியும் கூடிற் றங்கே:
சிந்தைமகிழ் தொண்டுபுரி நாவின் வேந்தர்
சீகாழிச் சம்பந்தர் சந்திப் பாகும்.

6